(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, September 10, 2016

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு – கலெக்டர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட உள்ளதாக கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

தமிழக அரசு கோழிப்பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கோழி அபிவிருத்தி திட்டத்தினைரூ.25.00 கோடி செலவில் 2016,-2017ம் ஆண்டிற்கு செயல்படுத்த ஆணை வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 140 அலகு நாட்டு கோழிப்பண்ணைகள் அமைக்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவேர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர், தேர்வு செய்யப்பட தகுதியானவர்கள். கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் விண்ணப்பத்தாரர் பெயரிலோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும்.கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 

பயனாளிகள் தங்கள் சொந்த முதலீட்டில் அல்லது வங்கி மூலம் கடன் பெற்று இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை அமைக்கலாம். நாட்டுகோழிப்பண்ணை அமைப்பதற்கான கோழிக்கொட்டகை கட்டும் பணி, உபகரணங்கள், கோழித்தீவனம், கோழிக்குஞ்சுகள் வாங்குதல், அசோலா உற்பத்தி போன்றவை அமைக்க ஆகும் மொத்த செலவில், 25 சதவீதம் முன் மானியம் தமிழக அரசு வழங்குகிறது.

இதைத்தவிர, கோழி வளர்ப்பதற்கான தீவன செலவினை குறைப்பதற்கு 10 பயனாளிகள் கொண்ட சுய உதவிக்குழு ஒன்றுக்கு தலா ஒரு தீவன அரவை இயந்திரம் தமிழக அரசு வழங்கவுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவர் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 3 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும்.

மேற்கூறிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியிலிருந்து ஒப்புதல் கடிதம் அல்லது சொந்த நிதிக்கான சான்றுடன் விண்ணப்பங்களை
மண்டல இணை இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
ராமநாதபுரம் உதவி இயக்குநர்,
கால்நடை பராமாரிப்புத்துறை,
ராமநாதபுரம், பரமக்குடி ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment