(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 8, 2016

அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கணேசலிங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது ரமலான்நகர் செட்டி ஊருணி பகுதி வழியாக வந்த 2 டிராக்டர்களை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து அனுமதியின்றி மணல் அள்ளிவந்த புல்லங்குடி அழகு மகன் கதிர்வேல்(வயது 28), இளமனூர் முனியசாமி மகன் கதில்ராமு(35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். 

செய்தி: தினசரிகள்

மேலும் இதுதொடர்பாக டிராக்டர்களை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment