(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 5, 2016

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற பிளஸ் 1 மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இதில் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி,புத்த மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவிகளுக்கு பிளஸ் 1 ல் ரூ.6 ஆயிரம், பிளஸ் 2 வில் ரூ.6 ஆயிரம் என, வழங்கப்படுகின்றன. இவை மாநிலம் முழுவதும் 1,873 மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.



பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1 பயில வேண்டும்.
விண்ணப்பத்துடன் சேர்க்கை அனுமதிச்சீட்டு கடிதம் நகல் இணைக்க வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள், அபிடவிட் உள்ளிட்டவை www.maef.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து
The Secretary,
Maulana Azaad Education Foundation 
MINISTRY of Minority Affairs, Goverment of India),
Chelms Ford Road,
NewDelhi-110155

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற விபரங்களை அனுப்ப வேண்டும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment