Friday, October 14, 2016
ராமநாதபுரத்தில் அக்டோபர் 21முதல் 23வரை மாவட்ட அளவிலான இறகுப்பந்துப் போட்டிகள்!!
ராமநாதபுரம்
சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் இம்மாதம் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தொடர்ந்து
3 நாள்கள் மாவட்ட அளவிலான இறகுப்பந்துப் போட்டிகள் நடைபெற இருப்பதாக மாவட்ட இறகுப்பந்துக்
கழக தலைவர் சின்னத்துரை அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இறகுப்பந்து
விளையாட்டினை மேம்படுத்துவதற்காக மாவட்ட இறகுப்பந்து கழகமும், கனகமணி மருத்துவமனையும்
இணைந்து இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்கி வரும் 23 ஆம் தேதி வரை இறகுப்பந்து போட்டிகளை
நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டிகளில்
பங்கேற்க விரும்புவோர் இம்மாதம் 17 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள்,
கல்லூரி முதல்வர்கள் கையெழுத்துடன் வயதுச் சான்றிதழை அளித்திடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இறகுப்பந்து கிளப்புகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்
மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டியில்
பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்
விபரங்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள்
தமிழரசன்
-9443977556,
கணேசன்-
9566773938
ஆகிய
எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment