(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 3, 2016

60 வயது மூதாட்டிக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை!!

No comments :
பரமக்குடி அருகே பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டத்திலேயே முதன்முறையாக 60 வயது மூதாட்டிக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரைச் சேர்ந்த கந்தவேல் மனைவி பாண்டியம்மாள் (60). இவர் கடந்த வருடங்களுக்கு மேலாக வலது கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்கை செய்ய பணம் வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். 

இதையடுத்து பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்தபோதுவட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் பாண்டியம்மாளை பரிசோதனை செய்தார். இதில் பாண்டியம்மாளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மூட்டு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. 



பரமக்குடி நலப்பணிகள்துறை இயக்குனர் டாக்டர் மீனாட்சியின் ஆலோசனைப்படி, பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் ரமேஷ் தலைமையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

கமுதி அரசு மருத்துவமனை எலும்பு அறுவை சிகிச்சை டாக்டர் தர்மராஜன், அறுவை சிகிச்சை நிபுணர் பாலமுருகன், மயக்க மருந்து நிபுணர் சங்கர். டாக்டர்கள் கார்த்திகேயன், திவான் முகைதீன், செவிலியர்கள் ஆறுமுகம், கலா, ரகுமத், அடங்கிய குழுவினர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அல்லாது தமிழகத்திலேயே கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது பார்த்திபனூரில்தான் என்பது குறிப்பிடதக்கது. அறுவை சிகிச்சைக்கு பின் பாண்டியம்மாள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment