(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, October 5, 2016

கூடுதல் வரதட்சணை கேட்ட கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு!!

No comments :
மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட கணவர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

ராமநாதபுரம் கறிவேப்பிலைகாரத் தெருவைச் சேர்ந்தவர் பூர்ணிமா, 23. மதுரை மேலுாரைச் சேர்ந்தவர் பிரபாகரன், 33. வெளிநாட்டில் வேலை செய்கிறார்.

இருவருக்கும் கடந்த 2013ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. திருமணத்தின்போது பூர்ணிமாவுக்கு பழைய நகை அணிவிக்கப்பட்டது.இது தொடர்பாக ஏப்., 2015ல் இரண்டு குடும்பத்தாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய பூர்ணிமா, கணவர் குடும்பம் மீது தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்பதாக போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்படி பிரபாகரன், அவரது பெற்றோர் ஜோதிமணி, வீரலட்சுமி மீது ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment