(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, November 3, 2016

கீழக்கரையில் நவ., 19, 20ல் மாநில அளவில் சிறுவர் செஸ் போட்டி!!

No comments :
கீழக்கரையில் நவ., 19, 20ல் மாநில அளவில் சிறுவர் செஸ் போட்டி நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன், கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரி இணைந்து மாநில அளவில் நடத்தும் குழந்தைகளுக்கான முதலாவது செஸ் போட்டி, கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லுாரியில் நவ., 19, 20ல் நடக்கிறது.

இதில் 9, 11, 13, 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.



ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடம் பிடிப்போருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. பங்கேற்க விரும்புவோர் 94431 34135 என்ற அலைபேசி எண்ணில் அல்லது chess.ramnad@gmail.com என்ற இணைய தள முகவரில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் தெரிந்து கொள்ளலாம், என மாவட்ட செயலர் ராக்லாண்ட் மதுரம் தெரிவித்துள்ளார்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment