(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 28, 2016

ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு!!

1 comment :
ராமநாதபுரம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணியில் ஈடுபட வந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் அருகே லாந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கருங்குளம், லாந்தை, கண்ணந்தை பகுதி கிராமங்கள் வழியாக மதுரை ராமேசுவரம் அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டுஉள்ளது. இங்கு ஆளில்லா ரெயில்வே கிராசிங் இதுநாள் வரை செயல்பட்டு வந்தன. இந்த ரெயில் பாதையில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை எடுத்துவிட்டு சுரங்கபாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்குகள் கணக்கெடுக்கப்பட்டு அவை உடனடியாக அகற்றப்பட்டு அதற்கு பதிலாக வாகனங்கள் சென்றுவர வசதியாக சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான பணிகளை ஆங்காங்கே தொடங்கி உள்ளன.



இதேபோல, ராமநாதபுரம் அருகே உள்ள கருங்குளம், லாந்தை பகுதிகளில் உள்ள ஆளில்லா ரெயில்வே கிராசிங்குகளையும் மூடிவிட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதனை அறிந்த அந்தபகுதி மக்கள் தங்களின் கிராம மக்கள் அத்தியாவசிய பணிகளுக்கும், மருத்துவ தேவைகளுக்காகவும், விவசாய பணிகளை மேற்கொள்வதற்காகவும் ரெயில்வே தண்டவாளத்தை தாண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுரங்கபாதை வழியாக வாகனங்கள் சென்றுவர முடியாததால் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆளுடன் கூடிய ரெயில்வே கிராசிங்காக மாற்ற வேண்டும் என்று அந்தபகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் திரண்டு வந்து கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் லாந்தை மற்றும் கருங்குளம் பகுதியில் ரெயில்வே சுரங்கபாதை அமைப்பதற்காக தொழிலாளர்கள் பணியில் ஈடுபட வந்தனர். இதனை அறிந்தகிராம மக்கள் அங்கு திரண்டு சென்று தங்கள் பகுதியில் சுரங்கபாதை அமைக்கக் கூடாது என்றும், ஆளுடன் கூடிய ரெயில்வே கிராசிங் மட்டுமே அமைக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு தெரிவித்து சுரங்கப்பாதை அமைக்க வந்த தொழிலாளர்களை கண்டித்து பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

இதனால் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடாமல் திரும்பி சென்றனர். இதன்காரணமாக அந்தபகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: தினத்தந்தி



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

1 comment :

Naveen said...

it is such a great and use full article thnx for good information online payment tangedco

Post a Comment