(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, December 18, 2016

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் டிச.,23ல் பேச்சு போட்டி!!

No comments :
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் டிச.,23ல் கல்லுாரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியதாவது:

கல்லுாரி மாணவ, மாணவிகளின் பேச்சாற்றல், படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் டிச.,23 காலை 9 மணிக்கு ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.


ஒரு கல்லுாரியில் ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து முதல்வர் கையொப்பம் பெற்று போட்டி நடக்கும் இடத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய்,
இரண்டாம் பரிசு 7,000 ரூபாய்,
மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment