Sunday, December 25, 2016
சீமைக் கருவேல மரங்களை ஜன. 4-க்குள் அகற்றாவிட்டால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்களில்
உள்ள சீமைக் கருவேல மரங்களை ஜனவரி 4 ஆம் தேதிக்குள்
அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.நடராஜன்
எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 13 மாவட்டங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள், நெடுஞ்சாலை ஓரங்கள், வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் போன்றவற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் இருக்கும்
சீமைக்கருவேல மரங்களை வரும் ஜனவரி 4 ஆம் தேதிக்குள் அகற்ற
வேண்டும்.
அவ்வாறு அகற்றவில்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment