முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 10, 2016

ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தின்போது ரதவீதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை!!

No comments :
ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்தின்போது ரதவீதிகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என, எஸ்.பி. மணிவண்ணன் தெரிவித்தார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று கோயிலில் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் எஸ்.பி., தலைமையில் நடந்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், நகராட்சி தலைவர் அர்ச்சுணன், தாசில்தார் கங்கா, பொறியாளர் மயில் வாகணன், கோயில் அதிகாரிகள் கக்காரின், அண்ணாதுரை, கமலநாதன், சுகாதாரம், தீயணைப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.


எஸ்.பி., கூறியதாவது: கும்பாபி ஷேகத்திற்கு வரும் பக்தர்களின் பாது காப்பு கருதி, கோயில் ரதவீதிகளில் வாக னங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட் டாது. கார் பார்கிங் பகுதி, அரசு பள்ளி மைதானத்தில் வாகனத்தை நிறுத்தி கொள்ளலாம். பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செய்வார்கள். ரதவீதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்போர், போலீசா ரிடம் முன் அனுமதி பெறவேண்டும். பாதுகாப்பு பணியில் ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர், என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுர பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா!!

No comments :
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் காஜாமுகைதீன் வரவேற்றார்.ராமநாதபுரம் நகரசபை தலைவர் சந்தானலட்சுமி கலந்துகொண்டு 724 மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 3 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.

இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் அப்துல் காதர் நன்றி கூறினார். 


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)