முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, January 11, 2016

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :
 வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன்படி 10–ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.600–ம், பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750–ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்ததொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்ததிட்டத்தில் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்று வேலைவாய்ப்பிற்கு காத்திருப்பவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பதிவு செய்திருக்க வேண்டும்.


இந்த உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் மாணவமாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. எனினும் தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி கல்வி மூலம் படிப்பவர்கள் உதவித்தொகை பெறலாம். 


மாற்றுத்திறனாளிகளுக்கு 10ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருக்க வேண்டும்

மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகங்களுடன் சுய உறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பித்தவர்கள் மற்றும் ஏற்கனவே உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பற்ற, பார்வையற்ற மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.


விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் இந்த உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இதேபோல வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கும் எவ்வித தடையும் ஏற்படாது. இந்த தகவலை கலெக்டர் நந்தகுமார் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

TNPSC VAO தேர்வுக்கான இலவச பயிற்சி!!

No comments :
TNPSC VAO தேர்வுக்கான இலவச பயிற்சி, மாணவர்கள் பயண்படுத்திக்கொள்ளவும்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)