முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 19, 2016

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க இன்று உதயமாகிறது ‘‘அம்மா அழைப்பு மையம்'!!

No comments :
தமிழகத்தில் பொதுமக்களின் குறைகளை தொலைபேசி மூலம் நேரடியாக பதிவு செய்யும் வகையிலான டெலிபோனிக் கேர் மையத்தினை முதல்வர் ஜெயலலிதா இன்று துவங்கி வைக்கின்றார். பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க ‘‘அம்மா அழைப்பு மையம்'' என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வந்துள்ளது.இந்த மையத்திற்கு 1100 என்ற இலவச எண் தரப்பட்டுள்ளது. இந்த நம்பரை எளிதாக மனதில் வைத்துக் கொள்ளலாம். எந்த இடத்தில் இருந்தும் இந்த நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அந்தக் குறை சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அதற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டு குறையை பதிவு செய்தவருக்கு பதிலளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டத்தை இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கெத்து - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
இயற்கை எழில் சூழ்ந்த குமுளியில் கதை நடக்கிறது.

கதை குமுளிக்கு வருவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரைக் கொல்வதற்கான சர்வதேசச் சதி பற்றிய காட்சி அரங்கேறுகிறது. விஞ்ஞானியைக் கொல்லும் பொறுப்பை விக்ராந்த் ஏற்றுக்கொள்கிறார்.
குமுளியில் உள்ள பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரிய ராகப் பணியாற்றுகிறார் சத்யராஜ். சாந்தமே உருவான அவரது மகன் உதயநிதி ஒரு நூலகர். மகள் தீபிகா, மனைவி பிரகதி ஆகியோருடன் அமைதியான வாழ்க்கையை நடத்திவரும் சத்யராஜ் துணிச்சலானவர்.

பள்ளிக்கு அருகில் நடத்தப் படும் ஒரு பார்’, கல்லூரி மாணவி களுக்குப் பெரும் தொல்லையாக அமைய, அவர் காவல்துறையில் புகார் கொடுத்துவிடுகிறார். இதனால் சத்யராஜுக்கும் பாரின் உரிமையாளர் மைம்கோபிக்கும் இடையே மோதல் நடக்கிறது.
கோபியின் ஆட்கள் தன் அப்பாவைத் தாக்கும்போது அப்பாவைக் காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார் உதயநிதி. மறுநாள் மைம் கோபி கொலையாகிக் கிடக்கிறார். கொலைப் பழி சத்யராஜ் மீது விழுகிறது. அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க உண்மையான கொலைகாரனை கண்டுபிடிக்கக் களமிறங்குகிறார் உதயநிதி.
அவரால் கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடிந்ததா? அந்தக் கொலைகாரன் யார்? அவனது நோக்கம் என்ன? விஞ்ஞானியைக் கொல்ல முனையும் விக்ராந்துக்கும் குமுளியில் நடக்கும் இந்த நாடகத்துக்கும் என்ன தொடர்பு? - இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் த்ரில்லராக விரித்துச் சொல்கிறது திருக்குமரனின் இயக்கத்தின் வெளியாகியிருக்கும் கெத்து’.தொடக்கக் காட்சியிலேயே கொலைகாரனை அறிமுகப்படுத்தி விட்டு, அவன் குமுளிக்கு எதற்காக வருகிறான் என்பதை மெல்ல மெல்ல விடுவிக்கும் திரைக்கதை, சரியான நேர்கோட்டில் அமைக் கப்பட்டிருப்பதும், திருப்பங்களை அளவாகவும் தெளிவாகவும் வைத்துக் கதையை நகர்த்திச் செல்வதும் பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்றவைக்கிறது. சர்வ தேசச் சதியுடன் குமுளிக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ள விதம் நன்றாக உள்ளது.
அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலைகள் நடக்கின்றன. ஆனால் அதற்கேற்ற பரபரப்பு காவல் துறையினரிடம் இல்லை. பல காட்சிகள் எளிதில் யூகித்து விடக்கூடிய விதத்தில் உள்ளன. உதயநிதிக்கு எழும் கேள்விகள் எதுவும் காவல் துறையினருக்கு எழவே இல்லை. இஸட் பிரிவு பாதுகாப்பு வளையத்துக்குள் உதய நிதி சர்வசாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். பாடல்களும் காதல் காட்சிகளும் கதையுடன் ஒட்டவே இல்லை. காதல் கதையை விட்டு நகர்ந்த பிறகு படம் சிறிதும் திசை மாறாமல் கச்சிதமாக நகர்வதையும் குறிப்பிட வேண்டும்.

மொத்தப் படமும் செறிவான முறையில் நேர்த்தியாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. கதைக் களம், ஒளியமைப்பு, காட்சிகளுடன் இயல்பாகப் பொருந்தும் சிறப்புச் சத்தங்கள், கலை இயக்கம், நட்சத்திரங்களின் தோற்றங்கள், ஆடை வடிவமைப்பு, பின்னணி இசை என அனைத்திலும் காணப்படும் நேர்த்தி படத்துக்கு மிகப் பெரிய பலம். சண்டைக் காட்சிகள் இரண்டையும் வடிவமத்த அன்புறிவ் கவர்கிறார்.

இதுவரை குடும்பப் பாங்கான நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த உதயநிதி, முதல் முறை யாக ஆக்‌ஷன் கதையில் நடித் திருக்கிறார். தனக்குப் பொருந்தும் விதமாக அலட்டல் இல்லாத கதையைத் தேர்ந்தெடுத்த விதம் பாராட்டுக்குரியது. யோகா மற்றும் சைவ உணவு விரும்பியாக அறிமுக மாகும் உதயநிதி, அப்பா தாக்கப் படும்போது அங்கே ஆஜராகித் தன் ஆக்‌ஷன் முகத்தைக் காட்டும் திடீர் கெத்து ரசிக்கும் விதமாக இருக்கிறது.

கதாநாயகி எமி ஜாக்சனுக்குக் கதையுடன் தொடர்பில்லாத காரணத்தால் அவரது பங்கு படத்தின் வசீகரத்துக்காக மட்டுமே பயன்பட்டிருக்கிறது. கருணாகரனை நகைச்சுவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியை மாற்றியதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

முதல்முறையாக எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ராந்த், பார்வையாலேயே மிரட்டிவிடுகிறார். குணச்சித்திர சத்யராஜுக்கு மேலும் ஒரு நறுக்கான பாத்திரம். அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார்.

மர்மக் கொலைகள், அதிமுக்கியமான விஞ்ஞானியைக் கொல்லும் சதி ஆகியவற்றைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள கெத்துநேர்த்தியான படமாக இருந்தாலும் கதைக்கு ஏற்ற பரபரப்பான திரைக்கதையை அமைப்பதில் ஏற்பட்ட சறுக்கலால் கெத்து கொஞ்சம் குறைவுதான்.


விமர்சனம்: ஹிந்து

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட் வேலை வாய்ப்பு, விண்ணப்பிக்க கடைசி நாள் 31.01.2016!!

No comments :
இந்தியாவின் விமான சேவை நிறுவனமாகத் திகழும் ஏர் இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையிலான 534 சீனியர் டிரெய்னி பைலட்டாக இணைவதற்கான ஒரு வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 534

பணி: சீனியர் டிரெய்னி பைலட்

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிளஸ் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சியின்போது மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.3000: இதனை வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்காக பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பப் படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள், டி.டி ஆகியவற்றை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

The General Manager (Personnel),
Air India Limited, Headquarters Airlines House,
113, Gurudwara Rakab Ganj Road,
New Delhi-110 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.airindia.in/writereaddata/Portal/career/254_1_AD-STP-2016-Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

துபாயில், இந்தியாவின் 67-வது குடியரசு தின விழாவையொட்டி சிறப்ப்பாக நடத்தப்பட்ட ரத்ததான முகாம்!!

No comments :
துபாய் ஈமான் கல்சுரல் செண்டர் இந்தியாவின் 67-வது குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு ரத்ததான முகாமை 15.01.2016 வெள்ளிக்கிழமை காலை மணிக்கு சோனாப்பூர் அல் நஜ்மா அல் பரிதா தொழிலாளர் முகாமில் நடத்தியது.


இந்த ரத்ததான முகாமுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜமால் முகம்மது அப்துல் கலாம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ரத்ததான முகாமில் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். ரத்ததான முகாமிற்கான வசதிகளை சிறப்புடன் செய்து கொடுத்த அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜமால் முகம்மது அப்துல் கலாமுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா நினைவுப் பரிசை வழங்கி கௌரவித்தார். மேலாளர் ஜமால் ஹாஜாவுக்கு ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் பூங்கொத்து கொடுத்து கௌரவித்தார்.
ரத்ததான முகாமுக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் முதுவை ஹிதாயத்ஹமீது யாசின்பைசுர் ரஹ்மான்கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லாஅபுதாகிர்அஞ்சுகோட்டை அப்துல் ரசாக்காதர் மொகிதீன்யாக்கூப்மொகிதின்ஜாபர் சித்தீக்தமீம் அன்சாரிகாயல் வாஹித்படேஷா பஷீர்காயல் ஈசா உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

தமிழ் ஆர்வலர் விஜயராகவனின் புதல்விகள் ரத்ததானம் செய்தவர்களுக்கான சான்றிதழ்களை அழகிய கையெழுத்தில் எழுதி கொடுக்கும் பணியினை மேற்கொண்டனர்.


அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் சார்பில் ரத்ததானம் செயதவர்களுக்கு வேண்டிய பழங்கள் மற்றும் ஜூஸ்களை மேலாளர் அபுதாகிர், சதாம், ராஜவேல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற அல் ரவாபி நிறுவனம், பிளாக் துலிப் பிளவர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)