முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 23, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்ளையர்கள் 4 பேர் கைது , 102 பவுன் தங்க நகைகள் மீட்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பகல் கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 102 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2015–ம் ஆண்டில் பல்வேறு இடங்களில் வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து பிடித்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார். இதற்காக கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுவரி தலைமையில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் பால்பாண்டியன், கீழக்கரை சப்இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், தங்கச்சாமி மற்றும் போலீசாரைக்கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி ரோந்து சுற்றி வந்தனர்.
இந்த நிலையில் கீழக்கரை பஸ் நிலைய பகுதியில் கடந்த சில நாட்களுக்குமுன் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஏர்வாடி அருகே உள்ள மாயாகுளம் பகுதியை சேர்ந்த சுல்தான் இப்ராகிம் என்பவருடைய மகன் முகம்மது தஸ்லீம் (வயது 34), கமாலுதீன் மகன் ஷாஜகான்(24) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.



இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் 2 பேரும் திருச்சி அண்ணாமலை நகர் முகம்மது குட்டி என்பவருடைய மகன் இஸ்மாயில்(32), மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த சோலைமலை மகன் சரவணன்(42) ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து முகம்மது தஸ்லீம், ஷாஜகான் 2 பேரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இஸ்மாயில், சரவணன் ஆகியோரை கீழக்கரை இந்து பஜார் பகுதியில் வைத்து நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்கலம், கீழக்கரை, திருப்புல்லாணி போன்ற பகுதிகளில் 9 திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு 102 பவுன் நகைகள், 3 கிராம் வெள்ளி பொருட்களை திருடியதுடன், ஒரு மோட்டார் சைக்கிள், லேப்டாப் போன்றவற்றையும் திருடி உள்ளனர்.

இவர்கள் அளித்த தகவலின்பேரில் 102 பவுன் நகை மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி மீட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து திட்டமிட்டு திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர்கள் ஒன்றாக சேர்ந்து செல்லாமல் இஸ்மாயில் தலைமையில் 2 பேராக மட்டும் சென்று திருடி வந்துள்ளனர். பெரும்பாலும் பூட்டி உள்ள வீடுகளை நோட்டமிட்டு பகல் நேரத்தில் யாருக்கும் சந்தேகம் வராதபடி வெளியில் மோட்டார் சைக்கிளில் ஒருவரை நிறுத்தி வைத்துவிட்டு உளி போன்ற கூர்மையான ஆயுதத்தால் இஸ்மாயில் கதவை உடைத்து உள்ளே சென்று திருடி வந்துள்ளார். திருச்சியை சேர்ந்த இஸ்மாயில், திண்டுக்கல் சிறையில் வைத்து சரவணனுடன் ஏற்பட்ட பழக்கத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.


இஸ்மாயில் ஏர்வாடியில் திருமணம் செய்துள்ளதால் அடிக்கடி வந்து சென்ற சமயங்களில் முகம்மது தஸ்லீம், ஷாஜகான் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு 4 பேரும் திட்டமிட்டு திருடி வந்துள்ளனர். இஸ்மாயில் திருட்டு சம்பவங்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதுடன் மற்றவர்களை துணைக்கு வைத்து செயல்பட்டுள்ளார். இதன்காரணமாக திருட்டு பொருட்களில் இஸ்மாயிலுக்கு 2 பங்கும், மற்றவர்கள் அனைவருக்கும் ஒரு பங்காக பிரித்து பங்கிட்டு வந்துள்ளனர். இந்த நகைகளை கிடைக்கும் விலைக்கு விற்பனை செய்து உல்லாசமாக பொழுதை கழித்து வந்துள்ளனர். இரவில் திருடினால் சந்தேகம் அதிகமாகும் என்பதால் ஆள்நடமாட்டம் இருந்தாலும் சந்தேகம் வராதபடி பகல்வேளையில் கொள்ளையடிப்பதை இந்த பகல் கொள்ளையர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில் இஸ்மாயில் மட்டும் சிறிது காலத்தில் திருட்டு தொழிலை கைவிட்டு வாழ்க்கையை தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏர்வாடி பகுதியில் ரூ.பல லட்சம் மதிப்பில் நிலம் வாங்கி போட்டுள்ளாராம். இவர் மீது கரூர், சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட திருட்டு, கொள்ளை வழக்குகளும், ஆதாயத்திற்காக கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இதுதவிர இவர்மீது துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த வழக்கும் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. சரவணன் கேரளாவில் வசித்து வந்த போது மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்த வழக்குடன் இவர் மீது பல திருட்டு வழக்குகளும் உள்ளன.

ராமநாதபுரம் வள்ளல்பாரி தெற்குத்தெருவை சேர்ந்த ராமானுஜம் என்பவரின் மகன் மாரிக்கண்ணுவின் மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து திருமண ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 6–ந்தேதி மாரிக்கண்ணு வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். இந்த சமயம் பார்த்து இந்த பகல் கொள்ளையர்கள் வீடு புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள், ரூ.20,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருடுபோனதால் இளம்பெண்ணுக்கு உடனடியாக திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது திருடு போன நகைகள் மீட்கப்பட்டுள்ளதால் மாரிக்கண்ணு குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தை கலக்கிய பகல் கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பாராட்டினார்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.நடராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார், பிரியா விடை பெற்ற முன்னாள் ஆட்சியர் திரு.நந்த குமார்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை காலை ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.


இவர் இதற்கு முன் சென்னையில் ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்தார்.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த க.நந்தகுமார், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், வருவாய் கோட்டாட்சியர் ராம்.பிரதீபன், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் பழனி, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் ஆரோக்கியசுகுமார், வட்டாட்சியர் ந.தர்மர், தமிழக ஹாக்கி சங்க மாநிலத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா ஆகியோர் வியாழக்கிழமை ஆட்சியர் க.நந்தகுமாரை சந்தித்துப் பேசினர்.
   
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)