Thursday, January 28, 2016
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இசேவை மையங்களுக்கு சென்று மின்கட்டணம் செலுத்தலாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இசேவை மையங்களுக்கு சென்று
மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு
அரசு கேபிள் டிவி நிறுவனம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி,
முதுகுளத்துார், கமுதி, கடலாடி,
திருவாடானை, ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 8
தாசில்தார் அலுவலகங்களில் பொது இசேவை மையங்களை
அமைத்துள்ளது. இந்த மையங்கள் ஞாயிறு,
இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5.45
மணி வரை செயல்படும். பொதுமக்கள் இந்த
மையங்களுக்கு சென்று வருமானம், ஜாதி சான்றிதல், திருமண நிதியுதவி,
பாஸ்போர்ட் திட்டங்கள் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும்
பெறலாம்.
தற்போது இசேவை மையத்தில் புதிதாக மின்கட்டணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கட்ட முடியும்.
தற்போது இசேவை மையத்தில் புதிதாக மின்கட்டணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை காலை 9.45 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கட்ட முடியும்.
மின்கட்டண தொகை ரூ 1 முதல் ஆயிரம் வரை இருந்தால் கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படும்.
மேலும் ரூ ஆயிரத்து ஒன்று முதல் 3ஆயிரம் வரை கட்டணமாக ரூ. 20 ம்,
ரூ 3
ஆயிரத்து ஒன்று முதல் 5 ஆயிரம் வரை கட்டணமாக ரூ. 30
ம்,
ரூ 5
ஆயிரத்து ஒன்று முதல் 10 ஆயிரம் வரை
கட்டணமாக ரூ. 40
ம்,
ரூ 10
ஆயிரத்துக்கு மேல் இருந்தால் கட்டணமாக ரூ. 50 ம் செலுத்த வேண்டும்.மின்கட்டணத்துடன் சேர்த்து சேவை கட்டணத்தை பொதுமக்கள் கட்ட வேண்டும். கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என்று
கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டி!!
கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட
அளவிலான திருக்குர்ஆன் கிராஅத் போட்டி நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 35 பள்ளிகளிலிருந்து 365
மாணவ, மாணவிகள் கலந்து
கொண்டனர். இப்போட்டியில் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 17 பரிசுகளை வென்று முதலிடத்தை பிடித்தனர்.
கண்ணாடி வாப்பா இன்டர்நேஷனல் பள்ளியை
சேர்ந்த மாணவர்கள் 7
பரிசுகளை வென்று 2 வது இடத்தையும், முகைதீனியா மெட்ரிக் பள்ளி மற்றும் சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப்
பள்ளி மாணவர்கள் தலா 5
பரிசுகளை பெற்று 3 வது இடத்தையும்
பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி முதல்வர் டாக்டர் சம்சுதீன் ஆலிம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக மக்கள் சேவை அறக்கட்டளை தலைவர் உமர் கலந்து கொண்டார். முன்னதாக இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இபுராகீம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், ஆசிரியை நவ்சாத் பேகம், நிர்வாக அலுவலர் மலைசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் ஜன. 30 ஆம் தேதி முதல் பிப்.3 ஆம் தேதி வரை தேசிய அளவிலான கேரம் போட்டிகள்!!
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில்
ஜன. 30 ஆம் தேதி முதல் பிப்.3
ஆம் தேதி வரை தேசிய அளவிலான கேரம் போட்டி நடைபெற உள்ளது என
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சு.பிரசாத் புதன்கிழமை தெரிவித்தார்.
ராமநாதபுரம் இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் மேலும் கூறியதாவது:
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் 14,17 மற்றும் 19
வயதுக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். ஆந்திரா- 34, ஜம்மு, காஷ்மீர்- 24,
மத்தியப் பிரதேசம்- 36, மகாராஷ்டிரம்- 36, தமிழ்நாடு- 36,
சத்தீஷ்கர்- 24, குஜராத்- 23, ஹரியானா- 12,
தெலுங்கானா- 10, பாண்டிச்சேரி- 10 மற்றும் வித்தியாபாரதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் 24 பேர் உள்பட 259
பேர் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அணி வீரர்களுக்கு ஜன.21 ஆம் தேதி முதல் பயிற்சி
அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களும்
வழங்கப்படவுள்ளன.
போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
க.ஜெயக்கண்ணு தலைமையில் உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். என அவர் தெரிவித்தார்.
செய்தி : தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)