முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, February 4, 2016

அதிமுக சார்பில் விருப்ப மனுக்களை வழங்க 3 நாட்களுக்கு கால அவகாசம், இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட கீழக்கரை சுல்தான் விண்ணப்பம்!!

No comments :
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை வழங்க மேலும் 3 நாட்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருப்ப மனு விநியோகம் இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, வரும் 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கீழக்கரையைச் சார்ந்தா இம்பாலா சுல்தான் விருப்ப மனு சமர்ப்பித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
 

ம் இராமநாதபுர தொகுதியில் “அம்மா” அவர்கள் போட்டியிட வேண்டி ஒரு  மனுவும், என் சார்பில் ஒரு மனுவும் சமர்ப்பிக்கிறேன்,
வாய்ப்பு கிடைத்தால் திறம்பட செயலாற்றுவேன் என்று கூறினார்.வாழ்த்துக்கள் திரு.சுல்தான்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)