Saturday, February 6, 2016
எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் என்ஜினீயர் பணியிடங்கள்!!
பெங்களூரிலுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனத்தில் சீனியர் உதவி என்ஜினீயர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், திறமையும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 27-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். மொத்தம் 30 பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும். மேலும் வயது 45-க்கு மிகாமல் இருக்கவேண்டும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் சீனியர் உதவி என்ஜினீயர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியுள்ளவர் விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் இணைந்து தபால் மூலம் அனுப்பவேண்டும்.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.bel-india.com என்ற இணையதளத்தைக் காணலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் மார்க்கெட் தீ விபத்தில் 11 கடைகள் எரிந்து நாசம்!!
ராமநாதபுரம் பாரதிநகர் மார்க்கெட்டில் வியாழக்கிழமை இரவு
ஏற்பட்ட தீ விபத்தில் 11
கடைகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.
ராமநாதபுரம் பாரதிநகர் மார்க்கெட்
பகுதியில் மீன் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் என 20-க்கும் மேற்பட்ட கூரை வேய்ந்த கடைகள் உள்ளன.
இக்கடைகளில்
வியாழக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதில் செந்தில், தினேஷ், அசார்,
சரோஜா, ரெகுநாதன் உள்ளிட்ட 11 பேரின் கடைகளில் இருந்த பொருள்கள்
எரிந்து நாசமாயின. இதுகுறித்து, கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
நன்றி அறிவிப்பு - இரண்டாம் ஆண்டில் முகவை முரசு!!
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வாசக நண்பர்களே,
முக்கியச் செய்திகள், வேலை வாய்ப்புகளை பல தளங்களிலிருந்து ஓரிடத்திற்கு தொகுக்கும் ஒரு
முயற்சியாக தொடங்கி, பிரத்யேக செய்திகள் வரத்தொடங்கி ஓராண்டு காலம் இடைவிடாது
இயங்கிய நம் முகவை முரசு இணையப்பத்திரிக்கை, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து
வைக்கிறது.
விளம்பரங்கள் தந்து ஆதரவு அளித்த,
ஹிஃபா ஹார்டுவேர்ஸ், சென்னை.
விளம்பரங்கள் தந்து ஆதரவு அளித்த,
ஹிஃபா ஹார்டுவேர்ஸ், சென்னை.
மஹாராஜா சில்க்ஸ், இராமநாதபுரம்.
ஃபில்ஸா புர்க்கா ஸ்டோர்ஸ், கீழக்கரை.
ஷிஃப்ட் விசா செர்வீஸ், துபாய்.
மற்றும் நம் இணைய பேனர் வழி சென்று ஆன்லைன் ஷாப்பிங் செய்த வாசக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகல் பல கோடி.
முகவை முரசு கொட்ட தொடர்ந்து இணைந்திருங்கள்.
செய்திகளுக்கும், விளம்பரங்களுக்கும் தொடர்பு கொள்ள:
இ-மெயில்: muhavaimurasu@gmail.com
தொலைபேசி எண்கள்:
இந்தியா: +91-8870546864
அமீரகம்: + 97152-9954431
சவூதி அரேபியா: +9665-40491021
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL/ALI BABA பேனர்கள் வழி செல்லுங்கள்)