முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, February 13, 2016

இராமநாதபுரம் MLA திரு.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் சாதனை பட்டியல்!!

No comments :
இராமநாதபுரம் MLA திரு.ஜவாஹிருல்லாஹ் அவர்களின் சாதனை பட்டியல் வெளியடப்பட்டுள்ளது. படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்.







பகிர்வு: திரு. சேக் அப்துல்லாஹ், இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஐந்து தமிழக(இராமநாதபுரம்) மாணவர்களுக்கு இளம் அறிவியலாளர் விருது!!

No comments :

'கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாகப் பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த இராமநாதபுரம் மாணவர்கள் ஐந்து பேருக்கு 'இளம் அறிவியலாளர்' விருது கிடைத்துள்ளது.

இந்தியாவில், தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் நடந்த 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன்ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா, அமிர்தா, கவியரசன் ஆகியோர் 'இளம் அறிவியலாளர் ' விருது பெற்றனர்.



'சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்தலாம்' என்று, இந்த ஐவரும் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரைக்காக, இந்த விருது கிடைத்துள்ளது.

மேலும், இந்தக் கட்டுரை மைசூருவில் 20 ஆயிரம் அறிவியலாளர்கள் பங்கேற்ற அனைத்துலக அறிவியல் மாநாட்டிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கடல் சங்குகளை வெப்பப்படுத்தி கிடைக்கும் கால்யசியத்தை உரமாகப் பயன்படுத்தினால், தாவரங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
இது, இயற்கை உரம்; சுற்றுச்சூழலைப் பாதிக்காது. இதைப் பயன்படுத்திய தாவரங்களில் கிடைக்கும் காய், கனி, விதைகளிலும் கால்சியம் சத்து அதிகமாக இருக்கும். இவற்றைச் சாப்பிடுவதால் எலும்புக்கு நல்ல வலிமை கிடைக்கும் என்று இந்த மாணவர்கள் கூறினர்.

செய்தி: திரு. அசோக், இராமநாதபுரம்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பான் கார்டு எண் அவசியம்: ராமநாதபுரத்தில் நகை வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்!!

No comments :
ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு எண் அவசியம் என்ற மத்திய அரசின் உத்தரவைக் கண்டித்து ராமநாதபுரத்தில் நகை வியாபாரிகள் வியாழக்கிழமை கடைகளை அடைத்தனர்.

ராமநாதபுரம் சிகில் ராஜ வீதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட நகைக்கடை உரிமையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது. இது குறித்து தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலர் பார்த்தீபன் கூறியது:

சங்க உறுப்பினர்கள் 300 பேரும், உறுப்பினர்கள் அல்லாத கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டமாக கடையடைப்பு செய்துள்ளோம். ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோர் அனைவரும் கட்டாயம் பான் கார்டு எண்ணை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருப்பது கவலையளிக்கிறது. இந்தியாவில் 20 சதவிகிதம் பேர் மட்டுமே பான் கார்டு வைத்துள்ளனர். மீதம் உள்ள 80 சதவீதம் பேரிடம் பான்கார்டு இல்லை. பான்கார்டு இல்லாதவர்கள் மனு எழுதித் தர வேண்டும் என்று கூறுவதால் நகை விற்பனை வெகுவாக பாதித்து விடும். பொற்கொல்லர்களுக்கும் வருமானம் குறைந்து விடும். மத்திய அரசுக்கு வாட்வரி,விற்பனை வரி ஆகியன குறைந்து வரி வருவாய் இழப்பு ஏற்படும்.


7 பவுனுக்கு மேல் நகை வாங்கினாலே பான்கார்டு அவசியமாவதால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள், விவசாயிகள் ஆகியோர் கூட நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 808 பேர் கைது!!

No comments :
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 808 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டமே தொடரவேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சதவீத அடிப்படையில் அனைத்து படிகளும் வழங்க வேண்டும், 7–வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும், காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பது போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்துவருகிறது. 

இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று மாநிலம் முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் முருகேஸ்வரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்ட முடிவில் அரசு ஊழியர் சங்கத்தினர் அனைவரும் திரளாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். இதனை தொடர்ந்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் மறியல் செய்த 808 பேரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் ராமநாதபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)