Wednesday, February 17, 2016
துபாய் மாகாணத்திலுள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி, பெற்றோர் அதிருப்தி!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாணத்திலுள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு, துபாய் பள்ளிக் கல்வித்துறையின் அங்கமான 'அறிவு மற்றும் மனிதவள அலுவலகம்' (KHDA) அனுமதி அளித்துள்ளது.
2016-17 கல்வியாண்டு வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்குவதை அடுத்து, கல்விக் கட்டணத்தை 3.21% முதல் அதிகபட்சம் 6.42% வரை, பள்ளிகள் பெற்றுள்ள தர வரிசைக்கேற்ப உயர்த்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு அறிவிப்பு நடுத்தர ஊதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அமீரகத்தில் பெட்ரோல், கட்டுமானத்துறை, வாடகை உள்ளிட்டவற்றின் விலை குறைந்துள்ள நிலையில், இந்த உயர்வு சரியல்ல என்று பெற்றோர்கள் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
துபாயில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட இந்திய பள்ளிகளில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தி: கல்ஃப் நியூஸ்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
பரமக்குடி அருகே அரசு பஸ் - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து, 2 பெண்கள் உயிரிழப்பு, 19 பேர் காயம்!!
பரமக்குடி அருகே அரசு பஸ் - டிப்பர் லாரி நேருக்கு நேர்
மோதியதில் 2
பெண்கள் சம்பவ இடத்தில் பலியாகினர். குழந்தை உட்பட 19 பேர் பலத்த காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் நோக்கி நேற்று மாலை 5 மணிக்கு "ஒன் டூ ஒன்' அரசு பஸ் வந்து
கொண்டிருந்தது. பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கி செம்மண் ஏற்றிய டிப்பர் லாரி
சென்றது. மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்த்திபனூர் அருகே
மரிச்சுக்கட்டியில் சென்ற போது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர்
மோதி விபத்துக்குள்ளானது. இதில் விக்கிரமபாண்டிய புரத்தைச் சேர்ந்த சண்முகவேலு
மனைவி மருதாயி,
60, வாலி நோக்கம் அருகே கீழக்கடாரத்தைச் சேர்ந்த ஆண்டி மனைவி
லட்சுமி,
30, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
பஸ் டிரைவர் நடராஜன், 45, கண்டக்டர்
அனந்தநாராயணன்,
56, திருமூர்த்தி மகள் அனிதா, 3, மதுரை கோமதி,
68, ராமநாதபுரம் இந்திரா, 33, கீழக்கடாரம்
மாரியம்மாள்,
56, பிச்சை, 40, முருகன், 47, குண சேகரன்,
23, லாரி டிரைவர் உடை குளம் ராஜூ ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அனைவரும் உடனடியாக மீட்கபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க பட்டனர்.
ராமநாதபுரம் துணை தாசில்தார்(தேர்தல்) சுரேஷ்குமார், 44 உட்பட 5
பேர் லேசான காயங்களுடன் தப்பினர். சம்பவ இடத்திற்கு 108 மற்றும் அனைத்து தனியார் ஆம்புலன்ஸ்களும் விரைந்து சென்று காயமடைந்த வர்களை
மீட்டு மருத்துவ மனைகளில் சேர்த்தனர். கலெக்டர் நடராஜன், சப்-கலெக்டர் சமீரன் பரமக்குடி அரசு மருத்துவ மனையில் காயமடைந்தவர்களுக்கு
ஆறுதல் கூறினர்.
பரமக்குடி தாசில்தார் செய்யதுமுகம்மது, டி.எஸ்.பி. பொன்னரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இந்த விபத்தால் மதுரை -
ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
காயமடைந்த மாரியம்மாள் கூறியதாவது: கீழக்கிடாரத்தைச்
சேர்ந்த நாங்கள் 6
பேர் அரசு பஸ்சில் ராமநாதபுரத்துக்கு சென்று
கொண்டிருந்தோம். எதிரே வந்த லாரி மற்றொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது பஸ்
மீது மோதியது. பின்னர் அனைவரின் அலறல் சப்தம் மட்டும் கேட்டது. என்னுடன் வந்த
உறவினர் லட்சுமி பலியானார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
கீழக்கரையில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு!!
கீழக்கரையில் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் செவ்வாய்கிழமை திருடிச் சென்றுள்ளனர்.
கீழக்கரை 500
பிளாட் பகுதியைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் முனியசாமி (35). இவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவரது மனைவி முருகவள்ளி சித்தாள் வேலை பார்க்கிறார்.
இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்றுவிட்டனர்.
அப்போது யாரோ மர்ம நபர்கள் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து
உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் தங்கநகை, 1 ஜோடி வெள்ளிக்கொலுசு,
ரொக்கம் ரூ.9 ஆயிரம் ஆகியவற்றை
திருடிச் சென்றுள்ளனர். திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.2 லட்சம்.
கீழக்கரை காவல்நிலையத்தில் முனியசாமி புகார் செய்தார். அதன் பேரில் காவல் உதவி
ஆய்வாளர் பொந்து முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)