முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 24, 2016

கீழக்கரை நகராட்சியில் கழிப்பறை கட்டுமானம் சம்பந்தமாக சமாதானக் கூட்டம்!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்துக்கு, வட்டாட்சியர் கமல்பாய் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவி ராவியத்துல் கதரியா, துணைத் தலைவர் ஹாஜா முகைதீன், ஆணையர் மருது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கீழக்கரையில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான மயானக்கரை மற்றும் பெத்ரி தெரு குப்பை கிடங்கு ஆகிய இரு இடங்களிலும் பொது கழிவறைகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு ஆயத்த பணிகள் நடைபெற்றன. இதற்கு அப்பகுதி பொதுமக்கள், கவுன்சிலர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, கீழக்கரை நகராட்சியில் செவ்வாய்க்கிழமை சமுதாய தலைவர்கள் பங்கேற்ற சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல இடங்களில் ஏற்கெனவே கட்டப்பட்ட கழிவறைகள்  பராமரிப்பின்றி மூடப்பட்டு கிடப்பதால் அந்த கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் படியும், தற்போது தேர்வு செய்த இடங்களில் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் கட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இது குறித்து நகராட்சி ஆணையர் மருது கூறியதாவது:

இக்கூட்டத்தில் கூறிய கருத்துக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.


செய்தி: தினமணி
பட உதவி: திரு தாஹிர், கீழக்கரை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

UPSC தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன!!

No comments :
மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தேர்வு (யுபிஎஸ்சி தேர்வு) முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன. குடிமைப் பணிகள் தேர்வுகள் கடந்த டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகளின் முடிவுகள்தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்வு முடிவுகளை அறிய http://upsc.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவேண்டும்.

அங்கு 'Written Result - Civil Services (Main) Examination. 2015 என்ற இடத்தில் கிளிக் செய்தால் முடிவுகள் தோன்றும். அந்த முடிவுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.தேர்வில் தகுதி பெறாத மாணவர்கன் மதிப்பெண் விவரம் இணையதளத்தில் 15 நாள்களுக்கு இருக்கும். இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 3 மாதம் வரை அந்த முடிவுகள் இருக்கும்.

இதைத் தொடர்ந்து தனி நபர் திறன் தேர்வு மார்ச் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இது
Dholpur House,
Shahjahan Road,
New Delhi - 110069

என்ற முகவரியில் நடைபெறும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 011-23385271 or 011-23381125 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் ரத்த தான முகாம்!!

No comments :
ராமநாதபுரத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் தன்னார்வ ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட மாணவரணியின் செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அதிமுக மாவட்டச் செயலர் ஆர்.தர்மர்,மகளிர் அணியின் மாவட்டச் செயலர் கவிதா சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவரணி மாவட்ட துணைச் செயலர் சுரேஷ் வரவேற்றார்.
இதில், மாணவரணியைச் சேர்ந்த தொண்டர்கள் 68 பேர் ரத்த தானம் செய்தனர்.அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் ஆய்வக நுட்பநர் சபீஅகமது உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக இம்முகாமை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் தொடங்கிவைத்தார்.

அண்ணா தொழிற்சங்க இணைச்செயலர் ஏ.பி.சந்திரன், மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ரவீந்திரன்,தமிழ்வாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)