முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Monday, March 21, 2016

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை சாலையை சீரமைக்க கோரிக்கை!!

No comments :


ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனை சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இச்சாலைப் பகுதியில் 3 தனியார் திருமண மண்டபங்கள், ஒரு கூட்ட அரங்கம், 5-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள், பேக்கரிகள், வணிக வளாகங்கள் உள்ளன. மேலும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, நகர் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், வேளாண்மைத் துறை அலுவலகங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் ஆட்சியரின் முகாம் அலுவலகம் என அரசு அலுவலகங்களும் இப்பகுதியில் இருப்பதால் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். தற்போது இச்சாலை அகலம் குறைந்து குறுகிய சாலையாக இருப்பதுடன் குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழையின் போது இச்சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்த மழைநீரால் சாலைகள் அரிக்கப்பட்டு பெரும் பள்ளங்கள் உருவாகி விட்டன.

மழைக் காலம் முடிந்தும், இச்சாலை சீரமைக்கப்படாமலேயே இருந்து வருகிறது. எனவே நகரின் பிரதான சாலையாக உள்ள இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஜவுளி ரெடிமேட் வர்த்தக சங்கத் தலைவர் வைகிங்.எம்.எஸ்.கருணாநிதி கூறியதாவது: இச்சாலை கடந்த 6 மாதங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலைகளில் பெரிய அளவில் பள்ளங்கள் காணப்படுகின்றன.

குண்டும், குழியுமாக உள்ள இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். தேர்தல் என்பதால் சாலையை தாற்காலிகமாக சீரமைக்க வேண்டியது அவசியம் என்றார்.

செய்தி: தினமணி(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 2 ஆயிரம் கிளார்க் பணியிடங்கள்!!

No comments :
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 2 ஆயிரம் கிளார்க் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவேண்டும்.

மொத்தம் 2 ஆயிரம் கிளார்க், உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

இதற்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். தேர்வுகள் ஆன்-லைனில் நடைபெறும். தேர்வுகள் மார்ச் முதல் ஜூன் மாதத்துக்குள்ளாக நடைபெறும். முதன்மை மற்றும் பிரதானத் தேர்வுகள் என 2 தேர்வுகள் நடைபெறும்.


விண்ணப்பங்கள் எஸ்பிஐ இணையதளத்தில் கிடைக்கும். கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். ரிசர்வ் பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆன்-லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு என்ற அடிப்படையில் ஆள் தேர்வு நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு http://www.sbi.co.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரை அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி!!

No comments :
கீழக்கரை அருகே கும்பிடுமதுரை சின்னபாளையரேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் சுமதி. பி.காம்., பட்டதாரி. இவருக்கு சுகாதாரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கீழக்கரை அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரன் ரூ.5 லட்சம் கேட்டார். இதில் ரூ.1.50 லட்சத்தை 9 மாதங்களுக்கு முன் சரஸ்வதியிடமிருந்து முன் பணமாக பெற்றுக்கொண்டார்.

ஆனால் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வருகிறார். மேலும் தன்னை தவறான வார்த்தைகளால் திட்டுவதாக எஸ்.பி., அலுவலகத்தில் சரஸ்வதி புகார் கொடுத்தார்.

இது குறித்து விசாரிக்க கீழக்கரை டி.எஸ்.பி., மகேஸ்வரிக்கு மணி வண்ணன் எஸ்.பி., அறிவுறுத்தினார்.


ராஜேந்திரன் கூறுகையில்," சரஸ்வதியின் உறவினர் ரகுமானிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன் ரூ.1.50 லட்சம் வாங்கினேன். இதை 10 நாட்களுக்கு முன் திரும்ப பெற்றுக்கொண்டதாக ரகுமான் உறுதிமொழி ஆவணம் எழுதி கொடுத்துள்ளார். அரசியல் விரோதத்தில் சரஸ்வதி மூலம் என் மீது கொடுத்துள்ளனர்,' என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)