முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 9, 2016

மக்கள் நல கூட்டணியில் த.மா.கா, 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது!!

No comments :
தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.

சட்டசபைத் தேர்தலில் 26 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
த.மா.கா. 26 தொகுதிகளிலும்,


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 25 கட்சிகளிலும் போட்டியிடுகின்றன.

மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனை சந்தித்து கூட்டணி குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆலோசைனயில் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரரசன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து வாசன், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது யார் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகளை கூட்டணி கட்சி தலைவர்கள் இறுதி செய்தனர்.

அதன்படி கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளதால் தேமுதிகவும்
, மக்கள் நலக்கூட்டணியும் இணைந்து 26 இடங்களை ஜி.கே. வாசனுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர்.




(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட உள்ள 5 தொகுதிகள்!!

No comments :
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட உள்ள 5 தொகுதிகளுக்கான பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட உடன்பாடு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை இன்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தலைவர் காதர் மொய்தீன் சந்தித்தார். அப்போது இரு கட்சிகள் நடுவே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது.

வாணியம்பாடி,
கடையநல்லூர்,
விழுப்புரம்,
பூம்புகார்,
மணப்பாறை

ஆகிய ஐந்து தொகுதிகளில், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுவதற்கான உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.



திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது குறித்து காதர்மொய்தீனிடம் நிருபர்கள் கேட்டபோது, "எந்த ஒரு கட்சியையும், கூட்டணியில் இணைத்துக்கொள்ள முடிவெடுத்த பிறகு, அந்த கட்சியை தாங்களாகவே வெளியே அனுப்பிய வரலாறு திமுகவுக்கு கிடையாது. திமுகவுடன் கூட்டணி சேர்ந்து எந்த ஒரு அரசியல் கட்சியும் போட்டியிட விரும்பாவிட்டால் அவர்களாக வெளியே செல்வதுதான் வரலாறு. இப்போதும் அதுதான் நடந்துள்ளது என்றார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் விபரம்!!

No comments :
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஹாரூன் ரசீத்தும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி நாகப்பட்டினத்திலும் போட்டியிடும்  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.



தமிழக சட்டசபைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அதிமுக கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சிக்கு நாகப்பட்டினம், ஒட்டன்சத்திரம் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் இரண்டு தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் ஹாரூன் ரசீத்தும் நாகப்பட்டினத்தில் தமிமுன் அன்சாரியும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்!!

No comments :
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 

உளுந்தூர்பேட்டை,
ராமநாதபுரம்,
ஆம்பூர்,
நாகை,
தொண்டாமுத்தூர்

ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. திமுக பொருளாளர் மு..ஸ்டாலினை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று மாலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து இன்று மாலை சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.


மேலும் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)