முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 17, 2016

இராமநாதபுர தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் மமக வேட்பாளர் திரு. ஜவாகிருல்லாஹ்!!

No comments :
மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் விபரம்!!


இராமநாதபுர தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் மமக வேட்பாளர் திரு. ஜவாகிருல்லாஹ்!!

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதியிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் - சு.ப. திவாரகரன்!!

No comments :
திருவாடானை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கட்சியின் மாவட்டச் செயலரான சு.ப.த.திவாகரன் சென்னையில் நடந்த வேட்பாளர் அறிவிப்பு கூட்டத்திற்கு பின், நேற்று மாலை பரமக்குடிக்கு வந்தார்.

பரமக்குடி அருகே உள்ள தெளிச்சத்தநல்லூர் பகுதியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நகர் செயலாளர் சேதுகருணாநிதி தலைமையில் தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. அதன்பின், மணிநகர் பகுதியில் பரமக்குடி தொகுதி வேட்பாளர் திசைவீரன் தலைமையில்,  மாவட்ட கவுன்சிலர் செந்தில் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.


அப்போது நிருபர்களிடம் கூறிய திவாகரன், “தமிழத்தில் விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை போன்ற ஊர்களில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டுவரப்படும், முதுகுளத்தூர் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும், தேவிபட்டனம் சுற்றுலா தளமாக மாற்றப்படும் போன்ற திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதியிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும்என்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.டி அருளாணந்தம், ஒன்றியச் செயலாளர்கள்  தினகரன் (பரமக்குடி), ஜெயக்குமார் (பரமக்குடி மேற்கு),  ராஜசேகர் (கடலாடி), கதிரவன், (போகலூர்), வேலாயுதம் (நயினார்கோவில்), மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வேல்ராமன்,  மாவட்ட பிரதிநிதி சேதுபதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அரி ராமபாண்டி, நகர் மாணவரணி அமைப்பாளர் மகேந்திரன், நகர் துணைச்செயலாளர் மும்மூர்த்தி, ஆகியோர் கலந்துகொண்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)