முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 19, 2016

பெங்களூரிலுள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்!!

No comments :
கர்நாடக மாநிலம் பெங்களூரிலுள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (யுஏஎஸ்) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பேராசிரியர், நூலகர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு
மே 16-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.பேராசிரியர் பணியிடங்கள் 30-ம்,
இணை பேராசிரியர் பணியிடங்கள் 16-ம்,
நூலகர் பணியிடம் ஒன்றும்,
உதவி பேராசிரியர் பணியிடங்கள் 58-ம் காலியாகவுள்ளன.

தகுதியுள்ளவர்கள் தங்களது சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். அனைத்துப் பணியிட விண்ணப்பங்களுக்கும் கட்டணம் உண்டு.

நேர்முகத் தேர்வு மூலம் அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை மே 16-ம் தேதிக்குள்
The Administrative Officer,
University of Agricultural Sciences,
GKVK,
Bengaluru: 560065

என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.uasbangalore.edu.in/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)