Monday, April 25, 2016
திமுக தேர்தல் அறிக்கையில் கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம், பொதுமக்கள் வரவேற்பு!!
கீழக்கரைக்கு 2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை
அடுத்து அப்போதைய திமுக நகராட்சி தலைவர் பசீர்அகமது அதற்கான ஆய்வு பணிகளையும்
முதற்கட்ட ஆயத்த பணிகளையும் மேற்கொண்டார். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பாதாள
சாக்கடை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது வரை
இத்திட்டத்திற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வில்லை.
இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கீழக்கரை, பரமக்குடி,
ராமேஸ்வரம் ஆகிய நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம்
நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு கீழக்கரை பொதுமக்கள், சமூகநல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக திமுக நகர செயலர் பசீர்அகமது கூறியதாவது, நகராட்சி தலைவராக நான் இருந்த போது வலியுறுத்தியதன் விளைவாக கீழக்கரைக்கு பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக இத்திட்டத்தை கிடப்பில் போட்டதால், கீழக்கரை நகர் முழுவதும் கழிவுநீர் தெருக்களில் ஓடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்களுடன் சேர்ந்து திமுக.வினரும் வரவேற்கின்றனர் என்றார்.

செய்தி: திரு. தாஹிர், கீழக்கரை
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமேஸ்வரம் கோயிலில் பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க கோரிக்கை!!
ராமேஸ்வரம் கோயிலில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டிக்
கிடக்கும் நூலகத்தை,
திறக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் நீண்டகாலமாக
தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில், இந்து அறநிலையத்துறை சமய
நூலகம் செயல்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்குள் ஒரு பகுதியில்
இயங்கி வந்த இந்த நூலகத்தில் மதம் சார்ந்த நூல்கள், புராண,
வரலாற்று நூல்கள், ராமேஸ்வரம் தொடர்புடைய
பழமையான நூல்கள்,
ஏடுகள் உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்தது.
ஆன்மிகம் சார்ந்த மாதாந்திர புத்தகங்களும் இருந்தது. இதனால் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினரும் இந்த நூலகத்தை பார்வையிட்டு பயன்படுத்தி வந்தனர். நூலகத்தை பராமரித்து, பார்வையிட வருபவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ் புலமையில் பட்டம் பெற்ற நபரும் கோயில் நிர்வாகத்தினால் பணி அமர்த்தப்பட்டார்.
சிறப்பாக இயங்கி வந்த நூலகம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோயிலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கோயில் வளாகத்தில் ஒரு பகுதியில் இயங்கி வந்த நூலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து கோயிலுக்கு வெளியில் கிழக்குரத வீதியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு நூலகம் மாற்றப்பட்டு அங்குள்ள ஒரு அறையில் நூலகத்திலிருந்த புத்தகங்கள் உட்பட அனைத்து பொருட்களும் பூட்டி வைக்கப்பட்டது.
தற்போது பூட்டப்படட அறைக்குள் பழமையான புத்தகங்கள் உட்பட அனைத்து நூல்கள் தூசு படிந்து கேட்பாரற்று யாருக்கும் பயன்படாமல் உள்ளது. மேலும் நூலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த கிரந்தம், சமஸ்கிருதம் மொழி சார்ந்த பழமையான அரிய நூல்கள் பலவும் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. பக்தர்களுக்கும், கல்வியாளர்களும் பயன்படுத்தி வந்த நூலகம் பல ஆண்டுகளாக திறக்கப்படாத நிலையில் நூலகத்திற்கென்று பணி அமர்த்தப்பட்ட தமிழ் புலவர் டிக்கெட் கவுண்டரில் பக்தர்கள் தீர்த்தமாட டிக்கெட் கொடுப்பது, சுவாமி சன்னதியில் தரிசன டிக்கெட் கொடுப்பது போன்ற பணிகளை செய்து வருகிறார்.

இதில் கூடுதல் வருவாய் கிடைப்பதால் நூலகத்தை திறப்பதை மறந்து டிக்கெட் கொடுக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராமநாத சுவாமி கோயிலில் இயங்கி வந்த வரலாற்று சிறப்பு மிக்க நூலகம் யாருக்கும் பயன்படாமல் உள்ளது. ஆனால் கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்படும் பட்டியலில் நூலகம் சிறப்பாக இயங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. பூட்டப்பட்ட நூலகத்தை திறந்து அனைவரும் பயன்பெறும் வகையில் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேணடும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தி: தினகரன்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரம் - சட்டமன்ற தொகுதி விபரம்!!
பெரிய மாவட்டமாக இருந்த ராமநாதபுரத்தை நிர்வாகக்
காரணங்களுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் கடந்த 14.7.1984இல் சிவகங்கை,
விருதுநகர், ராமநாதபுரம் என மூன்றாகப்
பிரித்தார்.
ராமேசுவரம் கோயிலின் மூன்றாம் பிரகாரம், கடலில் கப்பல்கள் செல்லும் போது திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட
பாம்பன் ரயில்பாலம்,
இந்திரா மேம்பாலம், ஏர்வாடி தர்கா,சிகாகோ பயணம் முடித்து சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பி வந்து முதலில்
கால்பதித்த குந்துகால் கடற்கரை, திருஉத்தரகோசமங்கை
பச்சைமரகத நடராஜர் திருக்கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் 44 ஆவது திருத்தலமாக விளங்கும் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாதப் பெருமாள் கோயில்
ஆகியன இத்தொகுதியின் சிறப்புகள்.
ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை உள்ளிட்ட 3
நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி
ஊராட்சி ஒன்றியங்களில் ராமநாதபுரத்தில் உள்ள 9 ஊராட்சிகள், மண்டபத்தில் உள்ள 25
ஊராட்சிகள்,திருப்புல்லாணியில் உள்ள 29 ஊராட்சிகள் உள்பட மொத்தம் 69 ஊராட்சிகளை உள்ளடக்கியது.
மேலும், ராமநாதபுரம்,
ராமேசுவரம்,கீழக்கரை நகராட்சிகள், மண்டபத்தில் உள்ள 18
வார்டுகள், 69 கிராம ஊராட்சிகள், ராமநாதபுரம் ஒன்றியத்தில் சித்தூர், இளமனூர், கழனிக்குடி,
காருகுடி, மாதவனூர், மாடக்கொட்டான்,
பேராவூர், தெற்குத்தரவை
கிராமங்களும்,
மண்டபம் ஒன்றியத்தில் ஆற்றங்கரை, என்மணங்கொண்டான்,
காரான், இருமேனி உள்ளிட்ட
கிராமங்களும்,திருப்புல்லாணி ஒன்றியத்தில் முத்துப்பேட்டை, நல்லிருக்கை,
நயினாமரைக்கான், பனையடியேந்தல், தில்லையேந்தல்,
திருப்புல்லாணி உள்ளிட்ட கிராமங்களும் அடங்கியுள்ளன.
மொத்த வாக்காளர்கள்
மொத்தம் வாக்காளர்கள் 2,81,563
ஆண்கள் 1,41,031
பெண்கள் 1,40,514
திருநங்கைகள் 18
வாக்குச் சாவடிகள் 321
தேர்தல் அலுவலர்
ராம். பிரதீபன். (கோட்டாட்சியர்)
செல்லிடப்பேசி எண்: 94455 00472.
முந்தைய தேர்தல்களில்
1952 சண்முகராஜேஸ்வர சேதுபதி (காங்) 26,131
1957 சண்முகராஜேஸ்வர சேதுபதி (காங்) 40,577
1962 சண்முகராஜேஸ்வர சேதுபதி (காங்) 44,942
1967 டி .தங்கப்பன் (திமுக) 35,880
1971 எம்.எஸ்.கே. சத்தியேந்திரன் (திமுக) 40,690
1977 டி.ராமசாமி (அதிமுக) 33,048
1980 டி.ராமசாமி (அதிமுக) 46,987
1984
டி.ராமசாமி(அதிமுக) 56,342
1989
எம்.எஸ்.கே.ராஜேந்திரன் (திமுக) 38,747
1991
தென்னவன் (அதிமுக) 62,004
1996
ரகுமான்கான் (திமுக) 59,794
2001
அன்வர்ராஜா(அதிமுக) 59,824
2006
ஹசன்அலி(காங்கிரஸ்) 66,922
2011
ஜவாஹிருல்லா(மமக) 65,831
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)