முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 11, 2016

ராமநாதபுரத்தில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

No comments :
ராமநாதபுரத்தில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது.

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 16–ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்திஇருந்தது.இதன்படி நேற்று ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி வளாகம், கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசுத்துறை அலுவலர்கள், இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பொது தேர்தல் பார்வையாளர்கள் விக்டர் மிக்வான், பரமக்குடி, திருவாடானை ரமேஷ்வர்மா, ராமநாதபுரம், முதுகுளத்தூர் தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்கள் பிரதாப் நாராயண்சர்மா, ஜிதேந்திரசிங், ராஜசேகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் அலி அக்பர், வருமான வரித்துறை துணை ஆணையர் மைக்கேல் ஜெரால்டு, ராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்பிரதீபன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இன்பமணி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள், இளம் வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தேவிபட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பார்கவி பிரசாரம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பார்கவி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
திருவாடானை தொகுதியில் போட்டியிடும் இக்கட்சியின் மாநில வர்த்தக அணியின் துணைத் தலைவர் ஏ. முகம்மது ஷெரீப் சேட் எரிவாயு உருளை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பார்கவி தேவிபட்டினம், பனைக்குளம், சித்தார்கோட்டை, புதுவலசை ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், திருவாடானை தொகுதியில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் அவர் பேசினார். பிரசாரத்தின்போது, கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)