Sunday, May 15, 2016
பூத் சிலிப் கிடைக்கவில்லையா?, கீழ்வரும் 11 அடையாள அட்டைகளின் ஒன்றைக் காட்டி ஓட்டு போடலாம்.!!
பூத் சிலிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத
நிலையில் வாக்களிப்பதற்கு தேவையான மாற்று ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அட்டை
இல்லை. எனவே,
வாக்காளர்கள் ஆதார் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டாம்.
மே-16
ஆம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்
பொழுது தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டை மற்றும் வாக்காளர் சீட்டு வைத்து
வாக்களிக்கலாம்.
ஆள்மாறாட்டம் செய்யப்படுவதைத் தடுத்திடும் வகையில், வாக்காளர்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான புகைப்பட அடையாள அட்டையை
தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத
வாக்காளர்கள்,
அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மற்றும் புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனுமொன்றை அளிக்கவேண்டும்.
1.
கடவுச்சீட்டு- பாஸ்போர்ட்
2.
ஒட்டுநர் உரிமம்
3.
மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் /
வரையறுக்கப்பட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள
அட்டைகள்
4.
வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன்
கூடியது
5.
நிரந்தர கணக்கு எண் அட்டை - பான் கார்டு
6.
தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப்
பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.
7.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்
பணி அட்டை
8.
தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட
மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
9.
புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம்
10.
தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட
வாக்காளர் புகைப்படச் சீட்டு
11.
பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு
வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை
இதில் ஆதார் அட்டை இடம் பெறாததால், வாக்களார்கள் அதை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)