முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 18, 2016

தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்கள் 21 பேர் விடுதலை!!

No comments :
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா முயற்சியில் தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்கள் 21 பேர் விடுதலை

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா அலுவலகம் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனிலிருந்து கடந்த ஏப்ரல் 26 அன்று கடலுக்குச் சென்ற சேசு இருதயம்பொங்கலாண்டிசேவியர்ஆகிய மூவருக்குச் சொந்தமான நாட்டுப்படகுகளை தலைமன்னார் அருகே கைப்பற்றி அதிலிருந்து 21 தங்கச்சிமடம் மீனவர்களை சிறைப்பிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த மே 11 அன்று தங்கச்சிமடம் மீனவர்கள் 21 பேரின் நீதிமன்றக்காவல் இரண்டாவது முறையாக மே 25 வரையிலும் நீட்டிக்கப்பட்டது. மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என அவர்களது குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் திடிர் என கடந்த புதன்கிழமை மதியம் தங்கச்சிமடம் கடற்கரையில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தீக்குளிக்க முயன்ற மகிமை தாஸ் எனும் மீனவரை மற்ற மீனவர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தனர்.இதனை தொடர்ந்து திமுக கூட்டணியின் சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் முனைவர் ஜவாஹிருல்லா போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களைச் சந்தித்து இலங்கைச் சிறையிலுள்ள தங்கச்சிமடம் பகுதி நாட்டுப் படகு மீனவர்கள் 21 பேரை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்துவேன் என மீனவர்களை சமாதான படுத்தியதுடன், இலங்கையின் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உத்தரவின் பேரில் முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் முத்தலி பாவா பாரூக் வவுனியா சிறைச்சாலைக்கு நேரில் தங்கச்சிமடம் மீனவர்களுக்குத் தேவையான உடைகள் மற்றும் உணவு சார்ந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பரிந்துரையின் அடிப்படையில் திங்கட்கிழமை 21 தங்கச்சிமடம் மீனவர் 21 பேர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.இன்று மாலை அவர்கள் ஊர் திரும்புவார்கள் என்று தெரிய வருகின்றது.

செய்தி: மனித நேய மக்கள் கட்சி அலுவலகம்

பகிர்வு: திரு. அஸ்கர் அலி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மாவட்டத்தின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை ராமநாதபுரம் அண்ணா கல்லூரியில் நடைபெற உள்ளது!!

No comments :
மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் நாளை, ராமநாதபுரம் அண்ணா கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன.

ராமநாதபுரம்,
பரமக்குடி (தனி),
திருவாடானை,
முதுகுளத்தூர்

ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து ஆயிரத்து 194 பேர் உள்ளனர்.
இவர்களுக்காக 1307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவில் மாவட்டம் முழுவதும் நான்கு தொகுதிகளிலும் லட்சத்து 43 ஆயிரத்து 841 வாக்குகள் பதிவானது. வாக்கு சதவீததம் 67.61. ராமநாதபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் நான்கு தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன.
நேற்று முன்தினம் மாலை மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும்வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் வாக்கு பதிவு அலுவலர்கள் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்தனர். பின்னர் மண்டல அலுவலர்கள்போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்தனர். நேற்று இரவு 9 மணியிலிருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. 
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயந்திரங்களை எடுத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை 5 மணி வரை கொண்டு வரப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்திலும் இரவு பகலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெற்றி பெறப்போவ்கிறவர்கள் யார்? மாவட்டத்தில் அந்த நான்கு MLA க்கள் யார்? என்பது நாளை தெரியவரும்.

செய்தி: தினசரிகள்(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)