Sunday, June 12, 2016
குற்றாலத்தில் சீசன் துவங்கியது!!
குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழக கேரளா எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.
இக்காலங்களில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த மக்கள் குவிவார்கள். இந்த சீசன் நாட்களில் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
இக்காலங்களில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த மக்கள் குவிவார்கள். இந்த சீசன் நாட்களில் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான செங்கோட்டை, புளியரை, குண்டாறு, மேக்கரை, குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து தண்ணீர் கொட்டத் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இன்று காலை அருவிகளில் வெள்ளம் வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அனுமதியளிக்கப்பட்டனர்.

இன்று விடுமுறை தினம் என்பதால் எராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ஜூன் 15-ம் தேதி கீழக்கரையில் ஜமாபந்தி!!
கீழக்கரை வட்டாட்சியர் எல்கைக்கு உள்பட்ட 26 கிராமங்களின் வருவாய்த் தீர்வாய கணக்குகளின் தணிக்கை, (ஜமாபந்தி) ஜூன் 15இல் தொடங்க இருப்பதாக வட்டாட்சியர் தர்மர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கீழக்கரை வட்டாரத்தில் 26
வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் தொடர்பான
வருவாய்த் தீர்வாய கணக்குகள் ராமநாதபுரம் தனித்துணை ஆட்சியர்(சிறப்புத் திட்ட
அமலாக்கம்) அவர்களால் ஆய்வு செய்யப்படவுள்ளது.
வரும் 15 ஆம் தேதி உத்தரகோசமங்கை, 16 ஆம் தேதி கீழக்கரை,
17 ஆம் தேதி திருப்புல்லாணி பகுதிகளின் கணக்குகள் ஆய்வு
செய்யப்படுகின்றன. இத்தேதிகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள்
குறைகளையும் தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
செய்தி: தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)