முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 8, 2016

கீழக்கரை சாலை பணிகளுக்காக, மயான பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டதற்கு எதிர்ப்பு!!

No comments :
கீழக்கரையில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சாலை பணிகளுக்காக வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள மயான பகுதியில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தகாரர் சார்பில் ஜல்லி கற்கள் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளன. ஒரு குறிப்பட்ட சமுதாய மக்கள் மயானத்தில் பயன்படுத்தும் இடத்தில் இந்த ஜல்லிகற்கள் கொட்டப்பட்டதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் திரண்டனர். இவர்கள் அங்கு ஜல்லிகற்கள் கொட்டுவதற்கு வந்த லாரிகளை சிறைபிடித்து முற்றுகையிட்டனர்.


இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக ஏராளமானோர் கீழக்கரை நகரசபை அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

நகரசபைக்கும் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் கீழக்கரை போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். மயான பகுதியில் ஜல்லி கற்களை கொட்டுவதை தடுக்கக் கோரியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனு கொடுத்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

பரமக்குடி நகராட்சி பகுதிகளில் குப்பைகளை அகற்ற கூடுதல் குப்பை வண்டிகள்!!!

No comments :
பரமக்குடி நகராட்சி பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அகற்ற ரூ.16 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பீட்டில் 64 புதிய 3 சக்கர குப்பை வண்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அதில் முதல் கட்டமாக 50 புதிய வண்டிகளை தொழிலாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.


ஆணையாளர் (பொறுப்பு) குணசேகரன் தலைமை தாங்கினார். சுகாதார அதிகாரி சீனிவாசன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் (பொறுப்பு) ஜெய்சங்கர் தொழிலாளர்களுக்கு புதிய குப்பை வண்டிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் கனகராஜ், கண்ணன், முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: தினத்தந்தி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)