முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 9, 2016

சுற்றித்திரியும் மனநோயாளிகளை அரவணைக்குமா அரசு!!

No comments :

அனாதரவாக சுற்றித்திரியும் மனநோயாளிகளை அரவணைக்க யாரும் இல்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏர்வாடி தர்ஹாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மனநோயாளிகள் அழைத்து வரப்படுகின்றனர். அவ்வாறு வரும்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் அல்லது ஏர்வாடி தர்ஹாவில் விட்டு விட்டு சென்று விடுகின்றனர். அதனால் அவர்கள் ஆதரவின்றி தெருவோரங்களில் திரியும் நிலை ஏற்படுகிறது. ராமநாதபுரம்ராமேஸ்வரம்பரமக்குடிஉச்சிப்புளிமண்டபம் போன்ற மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஏராளமான ஆண் மற்றும் பெண் மனநோயாளிகள் திரிகின்றனர். இவர்களுக்கு உணவுதங்குமிடம் கொடுத்து அரவணைக்க யாரும் இல்லாததால்சாலையோரங்கள் தான் அவர்கள் தங்குமிடமாகிறது.

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திரியும் இரண்டு பெண் மனநோயாளிகள்கடைகளில் ஏதாவது கேட்கிறார்கள். சிலர் பரிதாபப்பட்டு கொடுக்கிறார்கள். பலர் அவர்களை விரட்டியடிக்கின்றனர். இதனால் ஓடும்போது கீழே விழுந்து காயமடைந்து விடுகின்றனர். ஏர்வாடி தர்ஹாவில் திரிவது போல் தற்போதுமாவட்ட தலைநகரான ராமநாதபுரத்திலும் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவுதண்ணீர்சரியான ஆடை இன்றி வரும் அவர்கள்சாக்கடை நீரை அள்ளி குடிப்பதும்கழிவுகளை எடுத்து சாப்பிடுவதும் பரிதாபமாக உள்ளது.




இதேபோல் மண்டபம் கேம்ப் பஸ் ஸ்டாப்பில் இரவு நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் படுத்து கிடக்கிறார். பகல் நேரங்களில் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலையில் நடந்து மண்டபம்
  வரை செல்கிறார். செல்லும் வழியில் அப்பகுதியில் உள்ள பேக்கரி, டீக்கடைகள், ஓட்டல்களில் உணவு கேட்டு வாங்கி சாப்பிடுகிறார். அழுக்குப்படிந்த கிழிந்த ஆடைகளுடன் உலாவும், அவரை யாரும் கண்டு கொள்வது இல்லை.ஏற்கனவே ஏர்வாடியில் அதிகளவில் சுற்றித்திரியும் மனநோயாளிகளை போலீசார் பிடித்து, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வர். அதன்பின்பு பரமக்குடியில் உள்ள மனநல காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது கிடையாது. அதனால் மாவட்டத்தில் அதிகளவில் மனநோயாளிகள் சுற்றி திரிவதாக என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சமூகநல ஆர்வலர் ராஜாராம் கூறுகையில், தெருவோரம் திரியும் மன நோயாளிகளுக்கு உணவு, உடை அளித்து பராமரிக்கிறோம் என்று சொல்லும் பல தொண்டு நிறுவனங்கள், இவர்களை கண்டு கொள்வது கிடையாது. சாலையில் திரியும் மனநோயாளிகளை மாவட்ட நிர்வாகம் முறையாக
பரமக்குடியில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கைதி உயிரிழந்த சம்பவம் - நீதிபதி விசாரணை!!

No comments :
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்ப முயன்ற விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஏ.கண்ணன் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே நடந்த வழிப்பறி வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஷேக்அலாவுதீனை மருத்துவ சான்று வாங்குதற்காக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில் தப்பிச்செல்ல முயன்றபோது ஷேக்அலாவுதீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது சடலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏர்வாடி காவல்நிலைய சார்பு- ஆய்வாளர் காமராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



ஷேக் அலாவுதீனை கடந்த 3 நாள்களாக காணவில்லை என்றும் அவரை 3நாள்களாக சட்டவிரோத காவலில் வைத்திருந்து காவல்துறையினர் அடித்து கொலை செய்துவிட்டதாகவும் அவரது பெற்றோர் தரப்பில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து ராமநாதபுரம் 2-ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஏ.கண்ணன், அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஷேக் அலாவுதீன் சடலத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்.

பின்னர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசுத் தரப்பில் தெரிவித்தபடி இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், பிரேத பரிசோதனை முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.எஸ். சர்வேஷ்ராஜ் கேட்டுக்கொண்டபடி ஷேக்அலாவுதீன் சடலத்தை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் முகம்மது ரசீன் தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் கூறியது: ஷேக்அலாவுதீன் மீது மீது 23 குற்ற வழக்குகளும், ஒரு கொலை வழக்கும் உள்ளன. குண்டர் சட்டத்தில் இருமுறை கைது செய்யப்பட்டவர்.

இறந்தது கைதி என்பதால் உடனடியாக அவரது மரணம் குறித்து நீதிபதி விசாரணைக்கு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி நீதிபதியும் நேரில் விசாரணை நடத்தியுள்ளார். மேலும், நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை செய்துள்ளது.
நீதிபதி அறிக்கை கிடைத்தவுடன் தவறு யார் மீது இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)