Sunday, August 14, 2016
புதுமடம் தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 50 அடி நீளம் கொண்ட திமிங்கலம்!!
உச்சிப்புளி அருகே புதுமடம் தெற்கு கடற்கரையில் சுமார் 50 அடி நீளம் கொண்ட
திமிங்கலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே
உள்ள புதுமடம் தெற்கு கடற்கரை அதிக நீளம் கொண்டது. இந்த கடற்கரை பகுதியில் சிறிய
திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்குவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று
காலை ஆராய்ச்சி மையம் அருகில் தெற்கு பகுதியில் சுமார் 50 அடி நீளம் கொண்ட
திமிங்கலம் ஒன்று இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுக்கி கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மண்டபம் கடலோர போலீசார் மற்றும்
வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் இந்த திமிங்கலம் இறந்து பல
நாட்கள் ஆகியிருக்கலாம் என்று தெரிவித்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு மண்டபத்தில்
பெரிய திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. அதன்பின்னர் தற்போது அதிக நீளம்
கொண்ட திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து மண்டபம் வனத்துறை அலுவலர் கணேசன், மண்டபம் கடலோர
காவல்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார்,
போலீசார் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் ராமேசுவரம் கால்நடை மருத்துவர்
வீரமணிகண்டன் கடற்கரை பகுதியிலேயே உடற்கூறு பரிசோதனை செய்தார். அதனை தொடர்ந்து
கடற்கரையிலேயே அந்த திமிங்கலம் புதைக்கப்பட்டது.
இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறியதாவது:– இறந்து அழுகிய
நிலைய கரை ஒதுங்கிய இந்த திமிங்கலம் நீல திமிங்கலம் இனத்தை சேர்ந்தது. 3 டன் எடை உடையது.
இது ஆழ்கடல் பகுதியிலேயே வசிக்கும். சுமார் 22
வருடங்கள் உயிர் வாழும். மன்னார்வளைகுடா ஆழ்கடல் பகுதியில் இது காணப்படுகிறது.
கடந்த 1 ஒருமாதத்துக்கு
முன்பு கடலில் இறந்து தற்போது இந்த திமிங்கலம் கரை ஒதுங்கி இருக்கலாம். இவ்வாறு
அவர் கூறினார். புதுமடம் கடற்கரையில் திமிங்கலம் கரை ஒதுங்கியுள்ள தகவல்
அறிந்ததும் அந்தபகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் அங்கு சென்று
பார்வையிட்டனர்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ராமநாதபுரத்தில் TNPSC குரூப்-4 போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப்-4 போட்டித்
தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்,
செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக,
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து,
அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக, தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப்-4
போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், ராமநாதபுரம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய
பெயர் மற்றும் முகவரியை, ராமநாதபுரம்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 20
ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
பதிவு செய்தவர்கள் மட்டுமே செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல்
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.
செய்தி:
தினசரிகள்
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)