முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 1, 2016

ராமேஸ்வரம் கோயில் உண்டியல் காணிக்கை, ரூ. 70.44 லட்சம்!!

No comments :
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, ரூ. 70.44 லட்சம் கிடைத்தது.

ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு நேற்று கோயில் மற்றும் உப கோயில்களில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் பக்தர்கள் செலுத்திய ரொக்க பணம் 
ரூ.70. 44 லட்சம், தங்கம் 56 கிராம், வெள்ளி 6 கிலோ 240 கிராம் வருவாயாக கிடைத்தது.கோயில் இணை ஆணையர் செல்வ ராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர் ராஜாங்கம், கக்காரின், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் முன்னிலையில் ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் உண்டியலை பிரித்து கணக்கிட்டனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து செப்., 30க்குள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 

ராமநாதபுரம் மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதி அமைச்சு பணி மற்றும் அடிப்படை பணியில்
4 முதுநிலை கட்டளை பணியாளர்கள்,
தலா ஒரு
நகல் பரிசோதகர்,
வாசிப்பாளர்,
டிரைவர்,
4 ஜெராக்ஸ் ஆப்பரேட்டர்கள்,
13 அலுவலக உதவியாளர்கள்,
6 மசால்ஜிகள்,
5 இரவுக்காவலர்

என, 35 காலி பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் நேரடி நியமனம் நடக்க உள்ளது. 

இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. www.ecourts.gov.in/tn/ramanathapuram என்ற இணைய தள முகவரியில் கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரரின் அடிப்படை கல்வித்தகுதி, வயது வரம்பு, இனசுழற்சி விபரம், விண்ணப்ப படிவம், அனைத்து தகவல் பரிமாற்றங்கள், தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைப்பு இணைய தளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பங்களை செப்., 30க்குள்
முதன்மை மாவட்ட நீதிபதி
ராமநாதபுரம் 625 503

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, முதன்மை மாவட்ட நீதிபதி மீனா சதீஷ் தெரிவித்துள்ளார். 

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)