Sunday, September 4, 2016
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 11,00,971 வாக்காளர்கள்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 11,00,971 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியலை
ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து
ஆண் வாக்காளர்கள் 550780 பேர்,
பெண் வாக்காளர்கள் 5,50,119 பேர்,
மூன்றாம் பாலினத்தவர்கள் 72 பேர்
என மொத்தம் 11,00,971 வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கு முன்பு வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 11,00,194
வாக்காளர்கள் இருந்தனர். முன்பு வெளியிடப்பட்ட வாக்காளர்
பட்டியலை விட தற்போது கூடுதலாக 777 வாக்காளர்கள்
அதிகரித்துள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ராமநாதபுரம்
மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலிஅக்பர், ராமநாதபுரம்
கோட்டாட்சியர் ரா.ராம்பிரதீபன்,அரசியல் கட்சிப் பிரமுகர்கள்
செந்தில்குமார் (அதிமுக),
அன்பு பகுருதீன்(தேசிய வாத காங்கிரஸ்), முருகேசன் (காங்கிரஸ்),
ஹெச்.ஜான்சௌந்தர்ராஜ் (மதிமுக), காந்தி மற்றும் குமார் (பா.ஜ.க), சுப.தி.திவாகரன் (திமுக)ஆகியோர்
உள்பட பலரும் உடன் இருந்தனர்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
மருத்துவச் சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம், அதிகாரி கைது!!
ராமநாதபுரத்தில் மருத்துவச் சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சுகாதாரத்துறை ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார்
வியாழக்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள எருமைக்குளத்தில்
வசிக்கும் கணபதியின் மகன் பாலமுருகன் (24). பெயிண்டரான இவர்
தனக்கு மாற்றுத் திறனாளி என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்குமாறு ராமநாதபுரம்
மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையின் இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அங்கு இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் ரா.ராமகிருஷ்ணன் (50), சான்றிதழ் கொடுக்க ரூ.3000
லஞ்சம் கேட்டாராம். இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச
ஒழிப்பு காவல் பிரிவில்,
பாலமுருகன் புகார் அளித்தார். இந்நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள சுகாதாரப் பணிகள் துறை அலுவலகத்தில், ராமகிருஷ்ணன் லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாகப்
பிடித்து கைது செய்தனர்.
செய்தி: தினமணி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நிறைவு!!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா
சனிக்கிழமை நிறைவடைந்தது.
சந்தனக்கூடு திருவிழா கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான
சந்தனக்கூடு ஊர்வலம் ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த விழா நிறைவு பெறுவதை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை
கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகம், ஆந்திரம்,
கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் திரளாக
கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் எஸ்.பி.மணிவண்ணன் உத்தரவின் பேரில் கீழக்கரை
டி.எஸ்.பி. மகேசுவரி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)