முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, October 13, 2016

குவைத்தில் நாளை (14.10.216) கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

No comments :
குவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி!

குவைத் வாழ் தமிழ் உறவுகளே!
இன்ஷா அல்லாஹ்...

14.10.2016 வெள்ளிக்கிழமை
நண்பகல் 11:35 மணி முதல்...

K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்

சிறப்பு விருந்தினர்:
"சமூகநீதி போராளி" CMN முஹம்மது ஸலீம் M.A.,


நிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு

தலைப்பு:

இன்றைய கல்வியில்... வெளிநாட்டு வாழ்க்கையும்... உள்நாட்டு அரசு பணிகளும்...
குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!
பெண்களுக்கு தனியிட வசதி
வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
நேரலையில் காண... 
www.k-tic.com
www.facebook.com/q8tic
www.ustream.tv/channel/ktic-live
அழைப்பில் இன்புறும்....

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 97872482

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

தபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள், விண்ணப்பங்கள் வரவேற்பு!!

No comments :
தபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தபால்துறையானது வங்கிப் பணிகள் சேவையையும் வழங்குகிறது. இதையடுத்து தபால் அலுவகங்கள் வழியே வங்கிச் சேவையை எளிமைப்படுத்தும் வகையில் இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.) எனும் பொதுத்துறை நிறுவனம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்டு 17-ந் தேதிமத்திய கம்பெனிகள் விவகாரத்துறையின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 1.39 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்கள் உள்பட மொத்தமுள்ள 1.54 லட்சம் அஞ்சலகங்களே இந்த தபால் வங்கியின் அணுகும் இடங்களாக விளங்கும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்களும் உருவாகிய வண்ணம் உள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு பிரிவுகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 1725 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெவ்வேறு அறிவிப்புகளின்படி ஸ்கேல் 2,3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்களும், ஸ்கேல்-1 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 650 இடங்களும், தலைமை தொழில்நுட்ப அலுவலர், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரி பணிக்கு 15 இடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

துணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட 15 பணியிடங்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பும், பணி அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் முழுமையாக பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-10-2016-ந் தேதியாகும்.

650
உதவி மேலாளர் பணிகள்:

பிராந்திய அலுவலகங்களில் உதவி மேலாளர் (ஸ்கேல்-1) பணிகளுக்கு 650 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு 1-9-2016 தேதியில் 20 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-9-1986 மற்றும் 1-9-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25-10-2016-ந் தேதியாகும்.

1060
அதிகாரி பணிகள்

இதேபோல ஸ்கேல்-2, ஸ்கேல்-3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் மேனேஜர், மேனேஜர் பணிகள் உள்ளன. பிரிவு வாரியான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

சீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு 26 முதல் 35 வயதுடையவர்களும், மேனேஜர் பணிக்கு 23 முதல் 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-9-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் எம்.பி.ஏ., ஐ.சி.ஏ.ஐ./சி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர் களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150-ம், மற்றவர்கள் ரூ.700-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 1-11-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள்www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் இடம், உணவு அனைத்து இலவசம்!!

No comments :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம் , உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது. 


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 

நுழைவு தேர்வு நடைபெறும் தேதி: 

2017-
ம் ஆண்டு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு screening test 20.11.2016 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. 

வயது மற்றும் கல்வி தகுதி: 

இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 1.8.2017&ந் தேதியில் 21 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும். 

பயிற்சி விபரங்கள்: 

நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நூறு நபர்களுக்கு இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சி வகுப்புகள் 5.12.2016 முதல் 17.6.2017 வரை நடைபெறுகின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு, பயிற்சி படிப்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 

விண்ணப்பிக்கும் முறை: 

பயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களைhttp://mkuniversity.org/direct/index.htmlஎன்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரரின் படிப்பு, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவைகளுக்கான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். 

இத்துடன் 2 அலுவலகக் கவர்களில் ரூ. 5 அஞ்சல்முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரியுடன் எழுதி அனுப்ப வேண்டும். அலுவலக கவர்களில் 

“Application for Admission to Coaching for Civil Services Aptitude Test-2017” பயிற்சிவகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டு 

பயிலக இயக்குநர்
அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாடமி
இளைஞர் நல படிப்பியல் துறை
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்
மதுரை - 625021 

என்ற முகவரிக்கு அணுப்ப வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2016

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

மத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரத்தில் இலவச பயிற்சி - கலெக்டர்!!

No comments :
மத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.


இது குறித்து ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்த உள்ள இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
ஏற்கனவே பொறியாளர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. 

எனவே பி.இ. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்கள் மேற்படி இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 

மேலும் விபரங்களுக்கு செல்லிடப்பேசி 9952270579 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)