முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Wednesday, October 19, 2016

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு விற்பவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்!!

No comments :
தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் விற்பவர்கள் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக்காக இனிப்புகள், கார வகைகள், கேக் போன்ற பேக்கரி உணவுப் பொருள் பல இடங்களில் தயாரிக்கப்படுகிறது. இவற்றைத் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பவர்கல் உணவுப் பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றே விற்பனை செய்ய வேண்டும்.

தரமான மூலப் பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான முறையில் வழங்க வேண்டும். பேக்கிங் செய்யும்போது தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர்,  காலாவதியாகும் தேதி, சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

பண்டிகைக் காலத்தில் மட்டுமே பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இது தொடர்பான புகார்கள் இருப்பின் ராமநாதபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் நியமன அலுவலர் தொலைபேசி எண் -04567-231170 அவர்களிடம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

கீழக்கரையில் நாய் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு!!

No comments :
கீழக்கரையில் குட்டி போட்ட நாய் ஒன்று கடித்ததில் 4 வயது சிறுவன் காயமடைந்து  சிகிச்சை பலனளிக்காது மதுரையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

கீழக்கரை சாலைத் தெருவில் வசிக்கும் முகம்மது சலீம் மகன் ரய்யான்(4). இச்சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது குட்டி போட்ட நாய் ஒன்று அச்சிறுவனின் கழுத்தில் கடித்துள்ளது.உடனடியாக சிறுவன் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்ற அச்சிறுவன் உயிரிழந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)