முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, October 24, 2016

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது, தனி அதிகாரிகள் நியமன அரசாணை வெளியாகியது!!

No comments :
உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழகத்தில் தடை உள்ள நிலையில் மாநகராட்சிநகராட்சிபேரூராட்சிஊராட்சி ஒன்றியம் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவேசெவ்வாய்கிழமை முதல் தனி அதிகாரிகள்உள்ளாட்சி நிர்வாகங்களின் பொறுப்புகளை ஏற்க உள்ளனர். இதற்கான அரசாணை இன்று வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு போன்கார்தனி அலுவலகம் வழங்கப்பட்டு வந்தது. பதவி காலம் இன்றுடன் முடிவடைவதால் போன்கார் உள்ளிட்டவற்றை இன்று மாலைக்குள் திரும்பி ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த தலைவர்கள்உறுப்பினர்கள் வரும் வரை யாரும் நுழையாத வகையில் அவர்களது அறைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 24ம் தேதியான இன்றுடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிகிறது. எனவே, உள்ளாட்சி நிர்வாகங்களின் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனவே, அதை தவிர்க்க தனி அதிகாரியை நியமிக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை கூடி விவாதித்தது. உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஊராட்சி மற்றும் நகராட்சி சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அவசர சட்டம் பிறப்பித்தார். இந்த அவசர சட்டம் கடந்த 17ம் தேதியிட்ட தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது. மக்கள் பிரநிதிகளின் பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, இன்று மாலைக்குள் தனி அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தனி அதிகாரிகள் அக்டோபர் 25ம் தேதி முதல் உள்ளாட்சி நிர்வாக பொறுப்பை ஏற்க உள்ளனர்.

சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 மாநகராட்சிகளுக்கு அந்தந்த மாநகராட்சி கமிஷனர், 124 நகராட்சிகளும் அந்தந்த நகராட்சி கமிஷனர், 528 பேரூராட்சிகள் செயல் அலுவலர் (இஓ), 388 ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், 31 மாவட்ட ஊராட்சிகள் அந்தந்த மாவட்ட ஊராட்சி செயலர், 12,524 கிராம ஊராட்சிகள் அரசால் நியமிக்கப்படும் திட்ட அலுவலர்கள் ஆகியோர் நிர்வகிப்பார்கள். உள்ளாட்சி பணிகளை நிர்வகிக்கும் தனி அதிகாரிகளின் பொறுப்பு வரும் டிசம்பர் 31ம் தேதி வரை அல்லது உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நாள் வரை இருக்கும்.


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)