முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 7, 2016

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த குரூப்-4 தேர்வு, 24,032 பேர் எழுதினர்!!

No comments :


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த குரூப்-4 தேர்வில் 108 மையங்களில் 24,032 பேர் தேர்வு எழுதினர்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தேர்வு எழுவதற்காக 29,864 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 24, 032 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 8 பறக்கும் படைகளும், 25 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.


வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவை வழங்கப்படும் போது விடியோ பதிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் புனித ஆன்ட்ரூஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி மையங்களில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டார். தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் மிகவும் எளிமையானதாக  இருந்ததாகவும், பெரும்பாலான கேள்விகள் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்ததாகவும் தேர்வு எழுதிய பலரும் தெரிவித்தனர்.


பரமக்குடி வட்டத்தில் 45 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு மையங்களை வட்டாட்சியர் ராஜகுரு, குரூப் 4 தேர்வு உதவி பிரிவு அலுவலர் அருள்பிரசாத் ஆகியோர் தலைமையில் 9 பறக்கும்படை குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)