முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 20, 2016

ராமநாதபுரத்தில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி மெகா வேலைவாய்ப்புச் சந்தை!!

No comments :

ராமநாதபுரத்தில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி மெகா வேலைவாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் என்.சுப்பையன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள இச்சந்தை தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 

இந்த வேலைவாய்ப்புச் சந்தையில் தமிழகம் முழுவதும் இருந்து     70-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான இளைஞர்களை தேர்வு செய்ய இருக்கின்றன.

இதற்கென தாற்காலிகப்பேருந்து நிறுத்தம், இளைஞர்கள் வந்து செல்வதற்காக பேருந்து வசதி, குடிநீர் வசதி ஆகியன செய்வது குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது.


இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். ஆய்வின் போது ராமநதாபுரம் எஸ்.பி. மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.தனபதி, வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நடராஜன், மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் பெ.மாரியம்மாள், பொதுப்பணிததுறை உதவி செயற்பொறியாளர் குருதிவேல் மாறன்  உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுத்தில் இலவச TALLY பயிற்சி வகுப்பு!!

No comments :
ராமநாதபுத்தில் டேலி எனப்படும் கணினி இலவச பயிற்சி வகுப்பு வரும் டிசம்பர் 8 ஆம் தேதி துவங்க உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் ஆர்.சியாமளாநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் செயல்பட்டு வரும் இம்மையத்தின் சார்பில் கணினியில் டேலி எனப்படும் இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 8 ஆம் தேதி முதல் துவங்குகிறது.


இப்பயிற்சிக்கு 10 ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது.      பயிற்சிக்காலத்தில் உணவு,தேநீர் ஆகியன வழங்கப்படுவதுடன் பயிற்சிக்கான சான்றிதழும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.ஒரு மாத குறுகிய கால பயிற்சியாக தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும்.


இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் நவம்பர் 22 ஆம் தேதி மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் நவம்பர் 22 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை)  மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணியளவில் கூட்டம் நடைபெறும். இதில் கோட்ட அலுவலகத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) எம்.ஜோசப் செல்வராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)