முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Saturday, December 10, 2016

கச்சத்தீவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா!!

No comments :
  
கச்சத்தீவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா, 2017 ஆம் ஆண்டில் இரு நாட்டு பங்குத் தந்தையர்களும், மீனவர்களும் கலந்துகொள்ளும் வகையில் சிறப்பாக நடத்தப்படும் என இலங்கை நெடுந்தீவு பங்குத்தந்தை ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து வியாழக்கிழமை அவர் மேலும் கூறியது: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் முற்றிலுமாக புதிதாக 2600 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.


புதிய ஆலயத்தை கட்டுவதற்கு பங்களிப்பு செய்தவர்கள் இலங்கைக் கடற்படையினராவர். அவர்கள், மறைமாவட்டத்திடம் ஆலயத்தை ஒப்படைக்கும் நிகழ்வே இப்போது நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விலும், இந்தியாவிலிருந்து அருட்சகோதரிகளும், மீனவர்களும் என 20 பேர் பங்கேற்பதாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

புதிய ஆலயத்தின் திறப்பு விழா 2017 ஆம் ஆண்டு நடத்தப்படும். ஆண்டுதோறும் இருநாட்டு பக்தர்களும் கலந்துகொள்ளும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறும் நாளிலேயே, இரு நாடுகளின் மறைமாவட்ட ஆயர்களும், பக்தர்களும், மீனவர்களும் பங்கேற்கும் வகையில் திறப்பு விழாவையும் சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பங்குத்தந்தை ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் டிசம்பர் 14 ஆம் தேதி மையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில், டிசம்பர் 14 ஆம் தேதி மாலை 5 மணிக்கு சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அதிகாரி மு.அலி அக்பர் தலைமையில் நடைபெறவுள்ளது.  எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் முகவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், சமையல் எரிவாயு நுகர்வோர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பரமக்குடியில் நாளை (டிச.11) மெகா இலவச மருத்துவ முகாம்!!

No comments :
பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் ஜெம் மருத்துவமனை சார்பில், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்  ஞாயிற்றுக்கிழமை (டிச.11) மெகா இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
 
கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமானது, ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆயிர வைசிய சமூகநலச் சங்கம் சார்பில், வயிற்றுக் கோளாறு, உடல் பருமன், கல்லீரல், கணையம், கர்ப்பப் பை கோளாறு, சினைப்பை கட்டிகள், புற்று நோய் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது.
 


இம்முகாம், ஜெம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சி. பழனிவேலு தலைமையிலும், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் துறையின் தலைவர் மருத்துவர் பி. பிரவீண்ராஜ் முன்னிலையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. தேவைப்படும்பட்சத்தில், எண்டோஸ்கோபி, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவையும் இலவசமாக செய்யப்படும்.
 
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை வைத்திருப்போர் காப்பீட்டு அட்டை கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


மேலும் விவரங்களுக்கு, ஜெம் மருத்துவமனை அறக்கட்டளை 04222325100, 90039-32323. ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி 94431-23190, ஆயிர வைசிய சமூகநலச் சங்கம் 94431-29870 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)