முகவை முரசு

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Monday, December 19, 2016

ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் உதவி ஆசிரியர் பணியிடங்கள்!!

No comments :
ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் உதவி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிறந்த ஊதியத்துடன் சுதந்திரமாக பணியாற்ற ஏற்ற வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கிறது.

3 உதவி ஆசிரியர் (செய்திகள் பொது),
ஒரு உதவி ஆசிரியர் (விளையாட்டு செய்திகள்),
ஒரு உதவி ஆசிரியர் (பிசினஸ் செய்திகள்),
ஒரு உதவி ஆசிரியர் (சினிமா),
ஒரு முது நிலை உதவி ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் (டிரைவ்ஸ்பார்க்) பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை.


இதுதவிர மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் இருந்து பணிபுரிய செய்தியாளர்கள் தேவை. முக்கியச் செய்திகளை உடனுக்குடன், முழுமையாக சேகரிக்கும் திறமையுடைய, அரசு - அரசியல் - காவல்துறை வட்டாரங்களில் நல்ல தொடர்புகளை வைத்திருக்கக் கூடிய இளம் செய்தியாளர்கள் தேவை.

உங்களது சுய விவரங்களை தயார் செய்து உடனே அனுப்பி வையுங்கள்... நல்ல திறமையாளர்களுக்கு நிச்சயம் வாய்ப்புண்டு.

நில்லுங்க.. இன்னொரு வேலையும் இருக்கு... புள்ளிவிவரத்தை வைத்து சூப்பராக "இன்போகிராபிக்ஸ்" போடத் தெரிந்தவர்களுக்கும் ஒரு பணியிடம் காத்திருக்கிறது. கிராபிக்ஸில் நல்ல திறமை, அனுபவம், செய்தி ஞானம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.


உங்களது பயோடேட்டவை இந்த மெயில் ஐடிக்கு அனுப்பி வைக்கவும் st.arivalagan@oneindia.co.in(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

பேருந்தில் கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகள் ராமநாதபுரத்தில் பறிமுதல், ஒருவர் கைது!!

No comments :
சென்னையிலிருந்து பேருந்தில் கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை ராமநாதபுரத்தில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

இலங்கை கொண்டுச் செல்வதற்காக சென்னையிலிருந்து ஆம்னி பேருந்தில், ஆண்மையைத் தூண்டும் மாத்திரைகள், போதை மாத்திரைகள் உள்பட ரூ.1.50 லட்சம் மதிப்புளள பண்டல்கள் கடத்தி வரப்படுவதாக ராமநாதபுரம் உளவுத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


இதன்பேரில் காவல்துறையினரும், உளவுப் பிரிவினரும் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட பேருந்தில் வந்த மாத்திரை பண்டல்களை வாங்க வந்த ராமநாதபுரம் இந்திரா நகர் வேலு மகன் ராஜேந்திரன்(35) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.  

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பண்டல்களில், போதை மாத்திரைகள் உள்பட 5 வகையான மாத்திரைகள் 10 பண்டல்கள் இருப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.1.50லட்சம் எனவும், சென்னையில் வசிக்கும் காதர் என்பவர் ராமேசுவரத்தில் உள்ள டேவிட் என்பவர் மூலமாக இம்மாத்திரைகளை இலங்கைக்கு கடத்த முயற்சி செய்திருப்பதாகவும் தெரியவந்தது. 

மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)