Sunday, December 25, 2016
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!!
உச்சிப்புளி கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம்
செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் என்மனங்கொண்டான்
ஊராட்சிக்கு உட்பட்ட உச்சிப்புளி கடைவீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடையை இடம் மாற்றக்கோரி கடந்த ஜூலை மாதம் 27–ந்தேதி
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் கிராம பொதுமக்கள்
சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில்
தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
இதில் டாஸ்மாக் அதிகாரிகள், மண்டல துணை
தாசில்தார்,
கோட்ட ஆய அலுவலர், உச்சிப்புளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர், மண்டபம்
வருவாய் ஆய்வாளர்,
என்மனங்கொண்டான் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம
மக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் விரைவில் இந்த கடையை வேறு இடத்துக்கு
மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து
போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் உறுதி அளித்து 4 மாதங்களுக்கு
மேலாகியும் சம்பந்தப்பட்ட கடையை அந்த இடத்தில் இருந்து மாற்ற நடவடிக்கை
எடுக்கப்படவில்லை. இதை கண்டித்தும், டாஸ்மாக் கடையை உடனடியாக
இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தியும் நேற்று உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த
ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். முனியசாமி, கருப்பையா
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் காசிநாததுரை, தாலுகா செயலாளர்
ராஜ்குமார்,
மாதர் சங்க மாவட்ட செயலாளர் கண்ணகி, மாவட்ட
குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், கல்யாணசுந்தரம், உச்சிப்புளி
வர்த்தக சங்க தலைவர் அசரியா, செயலாளர் வேணுகோபால், பொருளாளர்
ராமச்சந்திரன்,
தாலுகா குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மாதர்
சங்க தாலுகா செயலாளர் மாலதி, வாலிபர் சங்க தாலுகா செயலாளர்
சத்தியேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சாத்தக்கோன்வலசை அழகுடையான், நொச்சியூருணி
பெரியகருப்பன்,
அரங்கன்வலசை சந்திரன், சாத்தக்கோன்வலசை பரமேசுவரி, அனைத்திந்திய
ஜனநாயக மாதர் சங்கத்தினர்,
கிராம மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
சீமைக் கருவேல மரங்களை ஜன. 4-க்குள் அகற்றாவிட்டால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்களில்
உள்ள சீமைக் கருவேல மரங்களை ஜனவரி 4 ஆம் தேதிக்குள்
அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எஸ்.நடராஜன்
எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 13 மாவட்டங்களில் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், ஊராட்சிக்குள்பட்ட பகுதிகள், நெடுஞ்சாலை ஓரங்கள், வருவாய்த்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் போன்றவற்றில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் இருக்கும்
சீமைக்கருவேல மரங்களை வரும் ஜனவரி 4 ஆம் தேதிக்குள் அகற்ற
வேண்டும்.
அவ்வாறு அகற்றவில்லையெனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)