முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 29, 2016

அதிமுக பொதுச்செயலாளராகிறார் திருமதி. சசிகலா, ராமநாதபுர மாவட்ட அதிமுக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!

No comments :
கண்களில் நீர் கசிய அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் இருந்து பெற்றுக் கொண்டார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதுடன் நாடாளுமன்ற வளாகத்தில் சிலை நிறுவ வேண்டும். உலக அமைதிக்கான நோபல் பரிசு, மகசேசே விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தும், அதிமுகவின் தலைமை பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானம் பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேறியது.

அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் ஓ. பன்னீர்ச் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை உள்பட முக்கிய நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சத்தித்தனர். அப்போது பொதுக்குழு தீர்மானத்தை சசிகலாவிடம் வழங்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

ஜெயலலிதாவின் புகைப்படத்தின் முன்பு பொதுக்குழுவிற்கான தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது கண்ணீர் மல்க ஜெயலலிதா படத்தின் முன்பு பெற்றுக் கொண்ட சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக சம்மதம் தெரிவித்தார்.

சசிகலா சம்மதம் கூறிவிட்டதாக பொதுக்குழுவில் திண்டுகல் சீனிவாசன் அறிவித்தார். ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று வணங்கிவிட்டு அ.தி.மு.க. தலைமை கழகம் சென்று பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பார் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த செய்தியையொட்டி, ராமநாதபுரம் மாவட்ட கீழக்க்ரையில், அஇஅதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 


இதில் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் இம்பாலா சுல்த்தான் நகர் அம்மா பேரவை செயலாளர் சரவண பாலாஜி, , சிவா, மாணவரணி செயலாளர் சுரேஷ், நகர் துணை செயலாளர் குமரன் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

50 நாட்கள் கடந்தும் சோகம் தீரவில்லை!!

No comments :

 

பிரதமர் கடந்த நவ.8ம் தேதி ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அந்த அறிவிப்பு வந்த நாள் முதல் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்து புதிய ரூபாய்களை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் வங்கிகளுக்கு போதிய அளவு புதிய ரூ.500, ரூ.ஆயிரம்  நோட்டுகள் வந்து சேராததாலும்ரூ.100, ரூ.50 நோட்டுக்கள் போதிய அளவில் இருப்பில் இல்லாததாலும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் வங்கிகள் தடுமாறி வருகின்றன. 

நாட்களில் இப்பிரச்னை சரியாகி விடும் என்று தெரிவித்த ரிசர்வு வங்கி தற்போது நாளுக்கு நாள் பணம் எடுக்க மற்றும் செலுத்த புதிய கட்டுப்பாடுகளை மட்டும் வெளியிட்டு வருகிறது. இதனால் கையில் செலவுக்கு வைத்திருந்த பணத்தையெல்லாம் வங்கியில் செலுத்தி விட்டு தற்போது அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.



வருகிற 30ம் தேதி வரையே பழைய 500, 1000 நோட்டுகளை மாற்ற முடியும் என்பதால் செல்லாத நோட்டுக்களை மாற்றுவதற்கு ராமநாதபுரம் சாலை தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ஆண்கள், பெண்கள் என பெரும்பாலான வாடிக்கையாளர்கள் நேற்று காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நகரில் 50 நாட்களாகியும் ஏடிஎம்கள் முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
 

ஒரு சில ஏடிஎம் மையங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. அவற்றிலும் நிரப்பப்பட்ட பணம் உடன் தீர்ந்து போவதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். பிற இடங்களை காட்டிலும் வணிகம், கடைவீதிகள் அதிகமுள்ள வங்கி கிளைகளில் பொதுமக்கள், வணிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.

வாடிக்கையாளர்கள் கூறுகையில், தனியார் வங்கிகளை காட்டிலும் அரசு வங்கிகளின் முன்புதான் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை கால்கடுக்க நின்றாலும் புதிய நோட்டுகளை போதிய அளவு பெற முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. தேசிய வங்கிகளில், அரசு அறிவித்தவாறு வங்கி கணக்கில் முன்பு டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து ரூ.24 ஆயிரத்தை தர மறுக்கின்றனர்.
 ரூ.5 ஆயிரம் அல்லது ரூ.10 ஆயிரம் மட்டுமே தருகின்றனர்.

கருப்பு பணத்தை அடியோடு ஒழிப்பதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறைந்து வருவதை கருத்தில் கொள்ள வேண்டும். வங்கிகளில் போதிய அளவு பணத்தை இருப்பு வைத்து அதிகளவில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :


நலிந்த விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை பெற ஜன.,31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பள்ளி, கல்லுாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய சங்கங்கள் நடத்திய விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்தவர்களாக இருக்க வேண்டும். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு தகுதியில்லை.

2016 ஏப்.,1ல் 58 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர், மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பிக்க முடியாது.



விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்து, தற்போது வருமானம் இன்றி சிரமப்படும் தமிழகத்தில் வாழும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு மானிய உதவித்தொகை வழங்குகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ராமநாதபுரம் சீதக்காதி சேதிபதி விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் 10 ரூபாய் செலுத்தி பெறலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன.,31க்குள் இதே அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படுபவை பரிசீலிக்கப்படாது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)