Monday, February 20, 2017
ராமநாதபுரம் மாவட்ட நடன, ஓவிய போட்டிகள்!!
ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் 5 முதல்
16 வயதுக்குட்பட்ட மாணவ,
மாணவிகளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில்
பரதநாட்டியம்,
கிராமிய நடனம், குரலிசை, ஓவியம்
ஆகிய கலைகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகள் வருகிற 23ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட அரசு இசை பள்ளியில் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொண்டு மாநில அளவில் போட்டிகளுக்கு சென்று
வெற்றிபெற்றால்
முதல் பரிசாக ரூ.10 ஆயிரம்,
2ம் பரிசாக ரூ.7
ஆயிரத்து 500,
3ம் பரிசாக ரூ.5
ஆயிரம்
மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என திட்ட அலுவலர் லோக
சுப்பிரமணியன் தெரிவித்தார்.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment