Wednesday, March 1, 2017
பெல் நிறுவனத்தில் 14 துணை பொறியாளர், விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 8 !!
பிரபல பெல் (பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில்
துணை பொறியாளர் (டெப்டி மேனேஜர்) பணிக்கு இந்தியா முழுவதும் 14 காலி இடங்கள் நிரபப்பபட விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலியிடங்கங் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான எழுத்துத் தேர்வு 26 மார்ச் 2017ம் தேதி அன்று நடைபெறும்.
விருப்பமும் தகுதியுமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி : துணை பொறியாளர் (டெப்டி மேனேஜர்)
பதவி : துணை பொறியாளர் (டெப்டி மேனேஜர்)
கல்வித் தகுதி : பி.இ / பி.டெக்
மொத்த காலியிடங்கள் : 14
வேலை இடம் : இந்தியா முழுவதும்
வயது வரம்பு (01.01.2017 தேதிக்குள்)
: 25 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்
சம்பள விகிதம் : Rs. 16,400 - Rs. 40,500 / மாதம்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : மார்ச் 8 2017
கல்வித்தகுதி - பி.இ, பி.டெக், பி.எஸ்.சி
எஞ்னியரிங் ஏஎம்ஐஇ,
ஏஐசிடிஇ
ஒப்புத்ல் பெற்ற கல்லூரிகளில் கல்வி கற்றிருக்க வேண்டும்
அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
பொதுப் பட்டியல் மற்றும் ஓபிசி பிரிவினைச் சார்ந்தவர்கள்
முதல் வகுப்பில் (பர்ஸ்ட் கிளாஸ்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி
மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டும் போதும்.
வயது வரம்பு - பொதுப்பட்டியலைச் சார்ந்தவர்களுக்கு -
அதிகப்பட்ச வயது வரம்பு 25
(01.02.1992 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்)
ஓபிசி பிரிவினருக்கு - அதிகப்பட்ச வயது வரம்பு 28 (01.02.1989 அன்று
அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) எஸ்சி மற்றும் எஸ்டி
பிரிவினருக்கு - அதிகப்பட்ச வயது வரம்பு 30 (01.02.1987 அன்று
அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்) மாற்றுத் திறனாளிகளுக்கு -
எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்களோ அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ள
வயது வரம்பிலிருந்து ஐந்து வருடம் கூடுதல் சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
எக்ஸ் சர்வீஸ் மேன் - கவர்மென்ட் கைடுலைன்ஸ் படி வயது
தளர்வு அளிக்கப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் - 11 காலியிடங்கள்:
எலக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்
எஞ்ஜினியரிங்
கம்யூனிகேஷன் எஞ்ஜினியரிங்
எலக்ட்ரானிக்ஸ் & டெலி கம்யூனிகேஷன்
எஞ்ஜினியரிங்
டெலிகாம் எஞ்ஜினியரிங்
மெக்கானிக்கல் - 2 காலியிடங்கள்:
மெக்கானிக்கல் எஞ்ஜினியரிங்
கம்ப்யூட்டர் சயின்ஸ் - காலியிடம் 1:
கம்ப்யூட்டர் சயின்ஸ் & எஞ்ஜினியரிங்
கம்ப்யூட்டர் எஞ்ஜினியரிங்
மேற்கண்ட காலியிடங்கள் அனைத்தும் எழுத்துத் தேர்வு மற்றும்
நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்படும் என பெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் எழுத்துத் தேர்வில் அதிக மார்க் எடுப்பவர்களே
நேர்முகத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள்
ஆன்லைனில் ஆப்ளை செய்யவும். முக்கியத் தேதிகள் எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க
வேண்டிய கடைசி தேதி - 8
மார்ச் 2017 எழுத்துத் தேர்விற்கான
நுழைவுச் சீட்டு - 18
மார்ச் 2017ல் இருந்து ஆன்லைனில்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு - 26 மார்ச் 2017 எழுத்துத் தேர்விற்கான ரிசல்ட் மற்றும் நேர்முகத் தேர்விற்கான நுழைவுச் சீட்டு
- 05 ஏப்ரல் 2017
அன்று வெளியிடப்படும்.
நேர்முகத் தேர்வு - 18 மற்றும் 19 ஏப்ரல் 2017
அன்று நடைபெறும் என பெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment