(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 1, 2017

சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கு, விஏஓ உதவியாளருக்கு ஓராண்டு சிறை!!

No comments :
பள்ளி மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.600 லஞ்சம் வாங்கி வழக்கில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

தொண்டி அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் நைனாமுகம்மது. இவர் தனது மகன்கள் இருவருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கோரி கிராம நிர்வாக அலுவலர் பழனியிடம் 25.2.2004-இல் விண்ணப்பித்தார். சான்றிதழ் வழங்க, பழனி மற்றும் கிராம உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் ரூ.600 லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் நைனாமுகம்மது தகவல் தெரிவித்தார். ரசாயனம் தடவிய ரூ.600 பணத்தை பழனியிடம் கொடுக்குமாறு நைனாமுகம்மதுவிடம் போலீஸார் கொடுத்தனுப்பினர். அவர் பழனி, ராஜேந்திரன் இருவரிடமும் பணத்தைக் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெயராஜ் லஞ்சம் வாங்கி பழனி, ராஜேந்திரன் இருவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞர் சீனிவாசன் ஆஜரானார். பழனி, ராஜேந்திரன் இருவரும் பணி நிறைவு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment