வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே! ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே!

Tuesday, March 7, 2017

ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இருக்கைளுக்கு கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட தாலுகா அலுவலகத்தில் இருக்கைகள் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் வண்டிகார தெருவில் தலைமை தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உச்சிப்புளி, மண்டபம், தேவிபட்டிணம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிராமமக்கள் தினந்தோறும் பல்வேறு சான்றிதழ் வாங்குவதற்காக அங்கு வருகின்றனர்.இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் மனு அளிக்க வரும் பொதுமக்களுக்கு போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால் தினந்தோறும் தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இருக்கைகள் இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் தாலுகா அலுவலகத்தின் முன்பு உள்ள வெளி வளாகத்தில் அமர்ந்து வருகின்றனர். நாளுக்கு நாள் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இருக்கைகள் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment