(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, April 15, 2017

பாம்பன், நாகையில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!!

No comments :

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி உருவாகி பின்னர் அது காற்றழுத்த தாழ்வாக மாறியது. தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுபடிப்படியாக அடுத்த 2 நாட்களில் புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளது.


இதை முன்னிட்டு நாகை, பாம்பன் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வானது. கடல் பகுதியிலேயே நிலை கொண்டு இருப்பதால் தரைப்பகுதியில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

இதன் காரணமாக வட தமிழகம் தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் சின்னம் உருவானால் தமிழகத்திற்கு மழை கிடைக்குமா, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கால்நடைகள் தேவைக்காவது நீர் ஆதாரம் பெருகுமா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment