Wednesday, April 26, 2017
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக கடை அடைப்பு போராட்டம், இராமநாதபுரத்தில் 41 பேர் கைது!!
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற கடை அடைப்பு போராட்டத்தின்
போது, மறியல்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., காங்கிரஸ்
உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
நிவாரண தொகை வழங்குவது,
நிவாரண தொகை வழங்குவது,
வங்கி கடனை ரத்து செய்ய
கோருவது
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக
தி.மு.க., காங்கிரஸ்,
கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத் தைகள்
உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நேற்று ஒருநாள் முழுகடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு
விடுத்திருந்தன. அதன்படி மாவட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர்
பல்வேறு இடங்களில் மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, அனுமதியின்றி
ஆர்ப்பாட்டங்களை நடத்தி கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில், நகர் செயலாளர் கார்மேகம், முன்னாள் கவுன்சிலர் அய்யனார், முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் சாதுல்லாகான் உள்ளிட்டோர் சாலை மறியல் செய்தனர். இதனை தொடர்ந்து ஒரு பெண் உள்பட 175 பேரை போலீசார் கைது செய்தனர். சாயல்குடி பகுதியில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், நகர் செயலாளர் வெங்கடேஷ்ராஜ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி ஆகியோர் தலைமையில் மறியல் செய்ய முயன்ற 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பான நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாரிராஜன், ஆர்ட் கணேசன், துணை தலைவர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் விஜயன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ராமநாதபுரம் தலைமை தபால் அலுவலகத்தினை சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தாராம் தலைமையில் முற்றுகையிட முயன்ற 4 பெண்கள் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் முன்னோடி வங்கியை முற்றுகையிட முயன்றபோது ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராதா தலைமையில் 4 பெண்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். கடலாடி தேவர் சிலை பகுதியில் கடலாடி ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்ற 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

நன்றி: தினத்தந்தி
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment