(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 16, 2017

கீழக்கரையில் காட்சிப்பொருளாக “நம்ம டாய்லெட்”, பயன்பாட்டுக்கு வருவது எப்போது?!!

No comments :
கீழக்கரை நகராட்சியில் மத்திய அரசு நிதி மற்றும் நகராட்சி பொது நிதியிலிருந்து ஆண், பெண், ஊனமுற்றோர் ஆகியோருக்கான மூன்று செட் (ஒரு செட் விலை ரூ.18 லட்சம் வீதம்) மூன்று செட்டுகள் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் யுனிவர்செல் டாய்லெட் கடந்த 2013ல் வரவழைக்கப்பட்டு தற்போது வரை காட்சி பொருளாகவே உள்ளது,

இதனால் பொது மக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கீழக்கரை நகராட்சியில் 2013ல் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் மத்திய அரசு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியிலிருந்து வரப்பெற்ற யுனிவர்செல் டாய்லெட்டை கடற்கரை பெட்ரோல் பங்க், முத்துசாமிபுரம், பெத்தரி தெரு ஆகிய இடங்களில் வைப்பது என்று நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தற்போது வரை கீழக்கரை அரசு மருத்துவமனையில் ஒரு ஓரமாக இரண்டு செட்களும், கீழக்கரை புதிய ஜெட்டிபாலத்தில் ஒரு ஓரமாக ஒரு செட்டு டாய்லெட்களையும் காட்சி பொருளாக வைத்திருக்கின்றனர்.

இதனால் பொது மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது, ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த யுனிவர்செல் டாய்லெட்டுகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment